இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்: முதல்வருக்கு விஜயகாந்த் அறிவுரை

வரும் 7ஆம் தேதி முதல் தமிழகத்தில் சென்னை தவிர மற்ற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஆளுங்கட்சியின் கூட்டணி கட்சிகளே அதிருப்தி தெரிவித்துள்ளன. இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 40 நாட்களாக டாஸ்மாக் மூடப்பட்டுள்ளதால் தமிழகம் சிறந்த மாநிலமாக இருப்பதாகவும், இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது.

கொரோனா அச்சுறுதல்‌ காரணமாக சென்னையில்‌ டாஸ்மாக்‌ கடைகள்‌ திறக்கப்படாது என்ற தமிழக அரசின்‌ அறிவிப்பை தேமுதிக சார்பில்‌ வரவேற்கிறேன்‌. அதே நேரத்தில்‌ மற்ற மாவட்டங்களில்‌ வருகிற மே 7ம்‌ தேதி முதல்‌ டாஸ்மாக்‌ கடைகள்‌ திறக்கப்படும்‌ என அறிவித்திருப்பது அனைவரையும்‌ பெரும்‌ அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த 40 நாட்களாக அமலில்‌ இருக்கும்‌ ஊரடங்கால்‌ பல குடும்பங்கள்‌ வேலையிழந்தும்‌, வாழ்வாதாரத்தை இழந்தும்‌ தவித்து வரும்‌ இந்த சமயத்தில்‌ டாஸ்மாக்‌ கடைகள்‌ திறப்பது என்பது மேலும்‌ குழப்பத்தையும்‌, பிரச்சனையும்‌ ஏற்படுத்தும்‌. எனவே ஊரடங்கு காலத்தில்‌ இருந்து தற்போது வரை டாஸ்மாக்‌ கடைகள்‌ மூடப்பட்டுள்ளதால்‌ தமிழகம்‌ மிக சிறந்த மாநிலமாக உருவாகிருக்கிறது. டாஸ்மாக்‌ கடைகள்‌ திறக்கப்படாததால்‌ மக்களும்‌ கட்டுகோப்பாக இருக்கிறார்கள்‌. இதனை பொன்னான வாய்ப்பாக எடுத்து கொண்டு தமிழகத்தில்‌ டாஸ்மாக்‌ கடைகளை நிரந்தரமாக மூடினால்‌ மக்களுக்கும்‌, நாட்டிற்கும்‌ நல்லது ஏற்ப்பட வாய்ப்புள்ளது.

எனவே வருகிற மே 7ஆம்‌ தேதி டாஸ்மாக்‌ கடைகளை திறக்க வேண்டும்‌ என்ற அறிவிப்பை தமிழக அரசு மறுபரிசீலனை செய்து, டாஸ்மாக்‌ கடைகளை திறக்காமல்‌ இருக்க தமிழக அரசை வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன்‌.

இவ்வாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

More News

கல்லூரிகள் திறப்பது குறித்த மத்திய அமைச்சரின் அதிரடி உத்தரவு!

நாடு முழுவதும் ஒன்றரை மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பள்ளி கல்லூரி மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்வு உட்பட பல தேர்வுகள் பள்ளி அளவில் நடை பெறவில்லை

மாதவரம் பால் பண்ணையில் மேலும் 6 பேருக்கு கொரோனா! பாலுக்கு தட்டுப்பாடு வருமா?

உலகெங்கிலும் மனித இனத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ஏழை பணக்காரர் வித்தியாசமின்றி அனைவரையும் தாக்கி வருகிறது என்பதும், லட்சக்கணக்கான உயிர்களையும் பலியாக்கி வருகிறது என்பதும் தெரிந்ததே.

டுவிட்டரில் இணைந்த பழம்பெரும் காமெடி நடிகர்

உலகம் முழுவதும் உள்ள நடிகர், நடிகைகள் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இணைந்து தங்களது ரசிகர்களுக்கு அவ்வப்போது தகவல்களை அளித்து வருகின்றனர்.

கொரொனோ கிடக்கட்டும், இதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிங்கய்யா! விஜய்சேதுபதியின் நக்கல் டுவீட்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் கடந்த ஒன்றரை மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஏழை எளிய மக்கள் வேலைக்கு செல்லாமல் பசியால் வாடுகின்றனர்.

சிங்கப்பூரில் வேலைப்பார்த்த 4,800 இந்தியத் தொழிலாளர்களுக்கு கொரோனா பாதிப்பு!!!

சிங்கப்பூரில் தங்கி வேலைப்பார்த்து வரும் 4,800 இந்தியத் தொழிலாளர்களுக்கு கொரோனா நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய உயர் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.