இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்: முதல்வருக்கு விஜயகாந்த் அறிவுரை
Send us your feedback to audioarticles@vaarta.com
வரும் 7ஆம் தேதி முதல் தமிழகத்தில் சென்னை தவிர மற்ற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஆளுங்கட்சியின் கூட்டணி கட்சிகளே அதிருப்தி தெரிவித்துள்ளன. இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 40 நாட்களாக டாஸ்மாக் மூடப்பட்டுள்ளதால் தமிழகம் சிறந்த மாநிலமாக இருப்பதாகவும், இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது.
கொரோனா அச்சுறுதல் காரணமாக சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்ற தமிழக அரசின் அறிவிப்பை தேமுதிக சார்பில் வரவேற்கிறேன். அதே நேரத்தில் மற்ற மாவட்டங்களில் வருகிற மே 7ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவித்திருப்பது அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த 40 நாட்களாக அமலில் இருக்கும் ஊரடங்கால் பல குடும்பங்கள் வேலையிழந்தும், வாழ்வாதாரத்தை இழந்தும் தவித்து வரும் இந்த சமயத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பது என்பது மேலும் குழப்பத்தையும், பிரச்சனையும் ஏற்படுத்தும். எனவே ஊரடங்கு காலத்தில் இருந்து தற்போது வரை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் தமிழகம் மிக சிறந்த மாநிலமாக உருவாகிருக்கிறது. டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாததால் மக்களும் கட்டுகோப்பாக இருக்கிறார்கள். இதனை பொன்னான வாய்ப்பாக எடுத்து கொண்டு தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடினால் மக்களுக்கும், நாட்டிற்கும் நல்லது ஏற்ப்பட வாய்ப்புள்ளது.
எனவே வருகிற மே 7ஆம் தேதி டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டும் என்ற அறிவிப்பை தமிழக அரசு மறுபரிசீலனை செய்து, டாஸ்மாக் கடைகளை திறக்காமல் இருக்க தமிழக அரசை வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக சென்னையில் டாஸ்மாக்கடைகள் திறக்கப்படாது என்ற அறிவிப்பை வரவேற்கிறேன்.
— Vijayakant (@iVijayakant) May 5, 2020
மற்ற மாவட்டங்களில், மே7 முதல் டாஸ்மாக் கடைகளை திறக்கவேண்டும் என்ற அறிவிப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும்.
டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடினால் மக்களுக்கும்,நாட்டிற்கும் நன்மை பயக்கும்@CMOTamilNadu pic.twitter.com/ZyJe0yCdnj
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments