ஆந்திர அரசால் முடியும்போது, தமிழக அரசால் முடியாதா? விஜயகாந்த் அறிக்கை

  • IndiaGlitz, [Saturday,June 06 2020]

ஆந்திராவில் ஆட்டோ, கால் டாக்சி ஒட்டுநர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது போல் தமிழகத்திலும் ஆட்டோ, கால் டாக்சி ஒட்டுநர்களுக்கு வழங்க வேண்டும் எனவும், ஆந்திர அரசால் முடியும்போது தமிழக அரசாலும் முடியும் என்றும் தேமுதிக பொதுசெயலாளர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கொரோனா பரவலை தடுக்கும்‌ வகையில்‌ நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 144 தடை உத்தரவால்‌ அனைத்து தரப்பினரும்‌ கடும்‌ பாதிப்புகளை சந்தித்து வருகிறார்கள்‌. தமிழகத்தில்‌ தற்போது தளர்வுகள்‌ அறிவிக்கப்பட்டு வந்தாலும்‌, கடந்த 3 மாதங்களாக ஆட்டோ, கால்‌ டாக்ஸி உள்ளிட்ட வாகனங்கள்‌ இயக்கப்படவில்லை. இதனால்‌, ஆட்டோ, கால்‌ டாக்ஸி உரிமையாளர்கள்‌ மற்றும்‌ ஓட்டுநர்கள்‌ கடும்‌ பொருளாதார நெருக்கடியில்‌
சிக்கித்‌ தவித்து வருகிறார்கள்‌. அவர்களுடைய வாழ்க்கையே மிகப்பெரிய கேள்வி குறியாக மாறியிருக்கிறது.

வாகன ஓட்டுநர்‌ உரிமம்‌, காப்பீடு மற்றும்‌ தரச்‌ சான்றிதழ்‌ ஆகியவற்றை புதுப்பிக்க 10 ஆயிரம்‌ ரூபாய்‌ வரை தாங்கள்‌ செலவு செய்வதாக ஆட்டோ, டாக்ஸி உரிமையாளர்கள்‌ வேதனை தெரிவிக்கிறார்கள்‌. எனவே, ஆந்திராவில்‌ வாகன மித்ரா திட்டத்தின்‌ மூலம்‌ 10 ஆயிரம்‌ ரூபாய்‌ வழங்குவது சாத்தியமாகும்‌ போது, தமிழகத்திலும்‌ இதுபோன்ற ஒரு திட்டத்தை கொண்டு வந்து, நமது ஆட்டோ, டாக்ஸி உரிமையாளர்கள்‌ மற்றும்‌ ஓட்டுனர்களுக்கு 10 ஆயிரம்‌ ரூபாய்‌ நிவாரண உதவியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என கேட்டுக்கொள்கிறேன்‌

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More News

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் கட்டணம் எவ்வளவு? தமிழக அரசு நிர்ணயம்

சமீபத்தில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் குறித்து ஐ.எம்.ஏ தனது பரிந்துரைகளை தெரிவித்து இருந்தது.

ஜார்ஜ் ஃபிளாய்ட் கொலை: இனவெறிக்கு எதிரான பேரணியில் கலந்து கொண்ட கனட அதிபர்!!!

அமெரிக்காவில் கடந்த மே 25 ஆம் தேதி ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கறுப்பினத்தவர் காவல் துறையினரின் பிடியில் சிக்கி உயிரிழந்தார்.

குழந்தைகளுக்கு லாலிபாப் வாங்க நினைத்த அமைச்சரின் பதவி பறிபோனது!!! காரணம் என்ன தெரியுமா???

மடகாஸ்கரில் கோவிட் ஆர்கானிக் என்ற மூலிகை மருந்து கொரோனா நோய்த் தடுப்பு மருந்தாகப் பயன்படுத்தப் பட்டு வருகிறது.

நயன்தாரா - ரம்யா கிருஷ்ணன்: அம்மன் வேடத்தில் பெஸ்ட் யார்? 

தமிழ் சினிமாவில் இதுவரை பல அம்மன் திரைப்படங்கள் வந்துள்ளன என்பதும் அவற்றில் பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளன என்பதும் தெரிந்ததே.

வித்தியாசமான முறையில் பீட்டாவிற்கு விளம்பரம் செய்த ரகுல் ப்ரித்திசிங்

சூர்யா நடித்த 'என்ஜிகே', கார்த்தி நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று', 'தேவ்' உள்பட ஒருசில தமிழ் படங்களிலும், பல தெலுங்கு படங்களிலும் நடித்தவர் நடிகை ரகுல் ப்ரீத்தி சிங்.