ஆந்திர அரசால் முடியும்போது, தமிழக அரசால் முடியாதா? விஜயகாந்த் அறிக்கை
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆந்திராவில் ஆட்டோ, கால் டாக்சி ஒட்டுநர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது போல் தமிழகத்திலும் ஆட்டோ, கால் டாக்சி ஒட்டுநர்களுக்கு வழங்க வேண்டும் எனவும், ஆந்திர அரசால் முடியும்போது தமிழக அரசாலும் முடியும் என்றும் தேமுதிக பொதுசெயலாளர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 144 தடை உத்தரவால் அனைத்து தரப்பினரும் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகிறார்கள். தமிழகத்தில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தாலும், கடந்த 3 மாதங்களாக ஆட்டோ, கால் டாக்ஸி உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படவில்லை. இதனால், ஆட்டோ, கால் டாக்ஸி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கடும் பொருளாதார நெருக்கடியில்
சிக்கித் தவித்து வருகிறார்கள். அவர்களுடைய வாழ்க்கையே மிகப்பெரிய கேள்வி குறியாக மாறியிருக்கிறது.
வாகன ஓட்டுநர் உரிமம், காப்பீடு மற்றும் தரச் சான்றிதழ் ஆகியவற்றை புதுப்பிக்க 10 ஆயிரம் ரூபாய் வரை தாங்கள் செலவு செய்வதாக ஆட்டோ, டாக்ஸி உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். எனவே, ஆந்திராவில் வாகன மித்ரா திட்டத்தின் மூலம் 10 ஆயிரம் ரூபாய் வழங்குவது சாத்தியமாகும் போது, தமிழகத்திலும் இதுபோன்ற ஒரு திட்டத்தை கொண்டு வந்து, நமது ஆட்டோ, டாக்ஸி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாகன ஓட்டுநர் உரிமம், காப்பீடு, தரச்சான்றிதழ் ஆகியவற்றை புதுப்பிக்க ₹10,000 வரை தாங்கள் செலவு செய்வதாக ஆட்டோ, டாக்ஸி உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
— Vijayakant (@iVijayakant) June 6, 2020
எனவே, ஆந்திராவில் வாகன மித்ரா திட்டத்தின் மூலம் 10 ஆயிரம் ரூபாய் வழங்குவது சாத்தியமாகும் போது, (1-2)@CMOTamilNadu pic.twitter.com/lQ9Ni3XVN3
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout