தேமுதிக சார்பில் 5 கோடி ரூபாய்க்கு நிவாரண பொருட்கள், ஆனால்... விஜயகாந்த் அறிக்கை
Send us your feedback to audioarticles@vaarta.com
ஊரடங்கு உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு திரையுலகினர்களும், அரசியல் கட்சிகளும், தன்னார்வலர்களும் தாராளமாக நிதியுதவி செய்து வருகின்றனர். குறிப்பாக அஜித் ரூ.1.25 கோடி, ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி வழங்கியுள்ள நிலையில் தற்போது நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் ரூ.5 கோடிக்கு நிவாரண பொருட்கள் தேமுதிக சார்பில் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். ஆனால் இந்த பொருட்கள் மே 3ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்தபின்னர் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கொரோனா வைரஸால் வரலாறு காணாத நிகழ்வு உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது. தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே மாதம் 3ம் தேதி வரை நீட்டுக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதாரத்தில் சிக்கியிருக்கும் மக்கள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியும், தேமுதிக தலைமை கழகமும் கொரோனா பயன்பாட்டிற்கு தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பல மாவட்டங்களில் மக்களுக்கான மக்கள் பணி தொடங்கப்பட்டிருக்கும் வேளையில், ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதால் மக்களுக்கான தேவை அதிகமாக உள்ளது. எனவே, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேமுதிக சார்பில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் மே 3ம் தேதிக்கு பிறகு வழங்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊரடங்கு, சமூக இடைவேளி, இவையெல்லாம் நீங்கிய பிறகு தேமுதிக சார்பில் மாவட்ட வாரியாக, நகரம், ஒன்றியம், பேரூர் கழகம், ஊராட்சி கிளை கழக நிர்வாகிகள், மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை நேரடியாக செய்ய வேண்டும். உண்ண உணவு, இருக்க இருப்பிடம், உடுத்த உடை, மருத்துவம், வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தில் சிக்கி உள்ளவர்களுக்கு பண உதவி போன்றவற்றை யாருக்கு என்ன தேவையிருக்கிறது என்பதை குறிப்பு அறிந்து, மக்களுக்கு நேரடியாக சென்றடைய நாம் தாயராக இருப்போம். கொரோனா ஊரடங்கு விலகிய பிறகு மே3ம் தேதிக்கு பின்னர் கழக நிர்வாகிகள் ஒவ்வொரும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க தயாராக இருங்கள் என கேட்டு கொள்கிறேன்
இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேமுதிக சார்பில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் மே 3ம் தேதிக்கு பிறகு வழங்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊரடங்கு, சமூக இடைவேளி, இவையெல்லாம் நீங்கிய பிறகு தேமுதிக சார்பில் மாவட்ட வாரியாக, (1-3)
— Vijayakant (@iVijayakant) April 14, 2020
என்ன தேவையிருக்கிறது என்பதை குறிப்பு அறிந்து, மக்களுக்கு நேரடியாக சென்றடைய நாம் தாயராக இருப்போம். கொரோனா ஊரடங்கு விலகிய பிறகு மே3ம் தேதிக்கு பின்னர் கழக நிர்வாகிகள் ஒவ்வொரும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க தயாராக இருங்கள் என கேட்டு கொள்கிறேன் (3-3) pic.twitter.com/xwg5t0edr4
— Vijayakant (@iVijayakant) April 14, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments