விஜயகாந்த் மகனுக்கு விரைவில் திருமணம்: மணப்பெண் யார் தெரியுமா?

தேமுதிக தலைவரும் பிரபல நடிகருமான விஜயகாந்த மகன் விஜயபிரபாகரனுக்கும் கோவை தொழிலதிபர் மகள் கீர்த்தானவுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக புகைப்படங்களுடன் கூடிய செய்தி வெளியாகியுள்ளது.

விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கும் கோவை மாவட்டம் பெரிய நாயக்கன்பாளையம் என்ற பகுதியை சேர்ந்த தொழிலதிபர் இளங்கோ மகள் கீர்த்தனாவுக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள நேற்று பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜயபிரபாகரன் ஆகியோர் கோவை வந்தனர். பின்னர் சிங்காநல்லூரில் உள்ள உறவினர் வீட்டில் பெண் பார்த்து பூ வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

மிகவும் எளிமையாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர் என்பதும் உடல்நிலை காரணத்தால் விஜயகாந்த் கூட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த நிகழ்ச்சியில் விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷ் கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தீ வைத்து கொளுத்தப்பட்ட உன்னாவ் இளம்பெண் மரணம்: என்ன செய்ய போகிறது உபி அரசு?

உத்திரப்பிரதேச மாநிலம் உன்னாவ் என்ற பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டு நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

ஐதராபாத் என்கவுண்டர்: ஏ.ஆர்.முருகதாஸ், சமந்தா, வரலட்சுமி கூறியது என்ன?

ஐதராபாத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட பெண் மருத்துவர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நால்வர் இன்று அதிகாலை போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்டனர்

போலீஸ் உடையில் சென்று இளம்பெண்ணை மிரட்டிய கள்ளக்காதலி: சென்னையில் பரபரப்பு

சென்னை தி நகர் ரயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவரை போலீஸ் உடையில் மிரட்டிய பெண்கள் மூவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தாடி வைத்திருந்ததால் வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு ரூ.6.67 லட்சம் இழப்பீடு.

தாடி வைத்திருந்த காரணத்திற்காக வேலை கொடுக்க மறுத்த நிறுவனம் ஒன்று, பாதிக்கப்பட்டவருக்கு இந்திய மதிப்பில் சுமார் ஆறரை லட்சம் ரூபாய் நஷ்டஈடு கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சம்பவம்

சட்டத்தின் மூலமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்: கமல் கட்சி அறிக்கை

ஐதராபாத் பெண் மருத்துவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வர் இன்று என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கைக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிடைத்து