பாராளுமன்ற தேர்தலில் விஜயகாந்த் மகன் போட்டியா?

  • IndiaGlitz, [Saturday,March 02 2019]

அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி என ஒரே நேரத்தில் இரண்டு கூட்டணியிலும் கடந்த சில நாட்களாக பேரம் பேசி வரும் விஜயகாந்தின் தேமுதிக கட்சி இன்னும் எந்த கூட்டணியில் சேருவது என்ற முடிவை எடுக்கவில்லை. இன்று விஜயகாந்த் தலைமையில் நடந்து வரும் ஆலோச்னை கூட்டத்திலாவது ஒரு முடிவு எடுக்கப்படுமா? என்று தொண்டர்கள் ஏக்கத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற தேமுதிக செயல்வீரர்கள் கூட்டத்தில் அதிமுக, திமுக என எந்த கூட்டணி தேமுதிக இணைந்தாலும், விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தேனி தொகுதியில் போட்டியிட வேண்டும் என தீர்மானம் போடப்பட்டுள்ளது. எனவே வரும் தேர்தலில் விஜயகாந்த் மகன் பிரபாகரன் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இருப்பினும் அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ் மகன் தேனியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதால் அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தால் தேனி தொகுதி தேமுதிகவுக்கு கிடைக்குமா? என்பது சந்தேகமே

மேலும் விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது ஒருசில மாதங்களாக கட்சியை நடத்தி வந்த பிரபாகரன், அதிமுக, திமுக என இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சனம் செய்தார். தற்போது இந்த இரு கட்சிகளில் ஒரு கட்சியின் ஆதரவில்தான் தேர்தலில் போட்டியிடப்போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.