ஒரு சூரியன், ஒரு சந்திரன்: மோடி-அம்பேத்கர் ஒப்பீடு குறித்து கேப்டன் விஜயகாந்த்!

இசைஞானி இளையராஜா சமீபத்தில் பிரதமர் மோடி மற்றும் அம்பேத்கர் ஆகிய இருவரையும் ஒப்பிட்டு கூறிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இது குறித்து தனது கருத்தை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

இளையராஜா அவர்கள் பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு புத்தகம் ஒன்றில் தனது கருத்தை தெரிவித்திருந்தார். இளையராஜாவின் கருத்து தனிப்பட்ட கருத்து மற்றும் கருத்து சுதந்திரம் என்ற நோக்கத்தோடு ஏற்றுக்கொண்டு மேலும் அவரை விமர்சனம் செய்து காயப்படுத்தாமல் இருப்பது பெருந்தன்மையானது.

மேலும் அண்ணல் அம்பேத்கர், பிரதமர் மோடி, இசைஞானி இளையராஜா ஆகியோர் சாதாரண குடும்பத்தில் பிறந்து இன்றைக்கும் அவரவர்கள் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக உள்ளனர். ஒரு சூரியன், ஒரு சந்திரன் அதே போல தான் இங்கு யாரையும் யாரோடும் ஒப்பிட முடியாது, அவர்களுக்கு நிகர் அவர் தான்’ என கேப்டன் விஜயகாந்த் கூறியுள்ளார்.

More News

ரஜினிக்கு விமானம், கமலுக்கு ரயில்: வேற லெவலில் 'விக்ரம்' புரமோஷன்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படத்திற்கு விமானத்தில் புரமோஷன் செய்யப்பட்ட நிலையில் உலக நாயகன் கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்திற்கு ரயிலில் புரமோஷன் செய்யப்பட்ட தகவல் வெளிவந்துள்ளது.

காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்துவிட்டதா? சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வாழ்த்து!

நடிகை காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்து உள்ளதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வரும் நிலையில் ரசிகர்கள் காஜல் அகர்வாலுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 

தளபதி விஜய்யின் 'பீஸ்ட்' தோல்விப்படமா? பிரபல விநியோகிஸ்தர் வெளியிட்ட அறிக்கை

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்'  திரைப்படம் ஒரு பக்கம் ரூபாய் 200 கோடி வசூல் செய்ததாக தகவல் வெளியானாலும் சமூக வலைத்தளங்களில் ஒரு சிலர் இந்தப் படம் மிகப் பெரிய தோல்வி படம் என்றும்

7 வருட இடைவெளி ஏன்? தனுஷின் பிரிவுக்கு பின் மனம் திறந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 2015ஆம் ஆண்டு 'வை ராஜா வை' என்ற திரைப்படத்தை இயக்கிய நிலையில்

'தலைவர் 169'  பட இயக்குனர் மாற்றமா? நெல்சனின் பரபரப்பு பதிவு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் 'தலைவர் 169' திரைப்படத்தை நெல்சன் இயக்குவார் என்றும் நெல்சன் இயக்க மாட்டார் என்றும் இருவேறு கருத்துக்கள் இணையதளங்களில் பரவி வரும் நிலையில்