ஒரு சூரியன், ஒரு சந்திரன்: மோடி-அம்பேத்கர் ஒப்பீடு குறித்து கேப்டன் விஜயகாந்த்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இசைஞானி இளையராஜா சமீபத்தில் பிரதமர் மோடி மற்றும் அம்பேத்கர் ஆகிய இருவரையும் ஒப்பிட்டு கூறிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இது குறித்து தனது கருத்தை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
இளையராஜா அவர்கள் பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு புத்தகம் ஒன்றில் தனது கருத்தை தெரிவித்திருந்தார். இளையராஜாவின் கருத்து தனிப்பட்ட கருத்து மற்றும் கருத்து சுதந்திரம் என்ற நோக்கத்தோடு ஏற்றுக்கொண்டு மேலும் அவரை விமர்சனம் செய்து காயப்படுத்தாமல் இருப்பது பெருந்தன்மையானது.
மேலும் அண்ணல் அம்பேத்கர், பிரதமர் மோடி, இசைஞானி இளையராஜா ஆகியோர் சாதாரண குடும்பத்தில் பிறந்து இன்றைக்கும் அவரவர்கள் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக உள்ளனர். ஒரு சூரியன், ஒரு சந்திரன் அதே போல தான் இங்கு யாரையும் யாரோடும் ஒப்பிட முடியாது, அவர்களுக்கு நிகர் அவர் தான்’ என கேப்டன் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இளையராஜா அவர்கள் பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு புத்தகம் ஒன்றில் தனது கருத்தை சொல்லியிருந்தார்.
— Vijayakant (@iVijayakant) April 19, 2022
இளையராஜாவின் கருத்தை தனிப்பட்ட கருத்து & கருத்து சுதந்திரம் என்ற உயர்ந்த நோக்கத்தோடு ஏற்றுக் கொண்டு, மேலும் அவரை விமர்சனம் செய்து காயப்படுத்தாமல் இருப்பது பெருந்தன்மையானது. pic.twitter.com/9xiDWoia2I
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com