அமெரிக்க தியேட்டரில் ஜாலியாக படம் பார்த்த கேப்டன்

  • IndiaGlitz, [Saturday,January 05 2019]

கேப்டன் விஜயகாந்த் சிகிச்சைக்காக கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்கா சென்றார் என்ற செய்தி தெரிந்ததே. அவருடன் அவருடைய மனைவி பிரேமலதா, மகன் சண்முகபாண்டியன் ஆகியோர்களும் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் உடல்நலம் குறித்த வதந்திகள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தோன்றி மறைவதுண்டு.

இந்த நிலையில் அனைத்து வதந்திகளையும் அடித்து நொறுக்கும் வகையில் அமெரிக்க தியேட்டர் ஒன்றில் ஜாலியாக மனைவியுடன் உட்கார்ந்து திரைப்படம் பார்க்கும் புகைப்படம் ஒன்று விஜயகாந்தின் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 'அக்வாமேன்' என்ற ஆங்கில திரைப்படத்தை ஐமேக்ஸ் திரையரங்கில் கண்டு மகிழ்ந்தோம் என்று விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.