தமிழக சட்டமன்ற தேர்தலில் திரை நட்சத்திரங்களின் நிலை என்ன?

  • IndiaGlitz, [Friday,May 20 2016]

கோலிவுட் திரையுலகிற்கும் அரசியலுக்கும் நெருங்கிய உறவு கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. கருணாநிதி, எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெயலலிதா உள்பட பல திரை நட்சத்திரங்கள் தமிழக அரசியலில் தங்கள் பங்களிப்பை அளித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த தேர்தலில் விஜயகாந்த், சரத்குமார், கருணாஸ், சீமான், சி.ஆர்.சரஸ்வதி ஆகிய திரையுலக பிரபலங்கள் போட்டியிட்டனர். அவர்களின் முடிவு என்ன என்பதை பார்ப்போம்,
விஜயகாந்த்: தேமுதிக தலைவர் மற்றும் மக்கள் நலக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான விஜயகாந்த், உளுந்தூர்பேட்டை தொகுதியில் மூன்றாவது இடம் பெற்று தோல்வி அடைந்தார்.
சரத்குமார்: அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்ட சரத்குமார், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனிதா ராதாகிருஷ்ணனிடம் சுமார் 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
சீமான்: கடலூர் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் தலைவரும் பிரபல இயக்குனருமான சீமான் மிகக்குறைந்த வாக்குகளே பெற்று டெபாசிட் இழந்தார்.
சி.ஆர்.சரஸ்வதி: அதிமுக வேட்பாளராக பல்லாவரம் தொகுதியில் போட்டியிட்ட சி.ஆர்.சரஸ்வதி வெற்றி பெற்றார்.
கருணாஸ்: அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் திருவாடனை தொகுதியில் போட்டியிட்ட கருணாஸ் வெற்றி பெற்றார்

More News

விஜய்சேதுபதியின் முதல் 2ஆம் பாக திரைப்படம்

விஜய்சேதுபதி, ஸ்வாதி ரெட்டி, நந்திதா, அஸ்வின் நடிப்பில் கோகுல் இயக்கிய 'இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா'...

தமிழக முதல்வருக்கு நடிகர் சங்கம் வாழ்த்து

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள முதல்வர்

அம்மாவுக்கு என் பணிவான வாழ்த்துக்கள் : நடிகை நமீதா

சமீபத்தில் அதிமுகவில் இணைந்த நடிகை நமிதா, தேர்தலில் அக்கட்சி பெற்ற வெற்றி குறித்து தனது கருத்துக்களை அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். நமீதா அறிக்கையின் முழுவிபரம் பின்வருமாறு...

த்ரிஷாவின் 'நாயகி' ரிலீஸ் தேதி

கோலிவுட் திரையுலகில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேல் முன்னணி நாயகியாக இருந்து வரும் த்ரிஷா இன்றைய...

கமல்ஹாசனின் 'சபாஷ் நாயுடு' ரிலீஸ் தேதி

உலக நாயகன் கமல்ஹாசனின் 'சபாஷ் நாயுடு'...