தமிழக சட்டமன்ற தேர்தலில் திரை நட்சத்திரங்களின் நிலை என்ன?
- IndiaGlitz, [Friday,May 20 2016]
கோலிவுட் திரையுலகிற்கும் அரசியலுக்கும் நெருங்கிய உறவு கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. கருணாநிதி, எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெயலலிதா உள்பட பல திரை நட்சத்திரங்கள் தமிழக அரசியலில் தங்கள் பங்களிப்பை அளித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த தேர்தலில் விஜயகாந்த், சரத்குமார், கருணாஸ், சீமான், சி.ஆர்.சரஸ்வதி ஆகிய திரையுலக பிரபலங்கள் போட்டியிட்டனர். அவர்களின் முடிவு என்ன என்பதை பார்ப்போம்,
விஜயகாந்த்: தேமுதிக தலைவர் மற்றும் மக்கள் நலக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான விஜயகாந்த், உளுந்தூர்பேட்டை தொகுதியில் மூன்றாவது இடம் பெற்று தோல்வி அடைந்தார்.
சரத்குமார்: அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்ட சரத்குமார், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனிதா ராதாகிருஷ்ணனிடம் சுமார் 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
சீமான்: கடலூர் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் தலைவரும் பிரபல இயக்குனருமான சீமான் மிகக்குறைந்த வாக்குகளே பெற்று டெபாசிட் இழந்தார்.
சி.ஆர்.சரஸ்வதி: அதிமுக வேட்பாளராக பல்லாவரம் தொகுதியில் போட்டியிட்ட சி.ஆர்.சரஸ்வதி வெற்றி பெற்றார்.
கருணாஸ்: அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் திருவாடனை தொகுதியில் போட்டியிட்ட கருணாஸ் வெற்றி பெற்றார்