சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கேப்டன்...!

தனியார் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டிருந்த விஜயகாந்த் அவர்கள் நேற்றிரவு சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

மாதாந்திர சிகிச்சைக்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை, ராமபுரத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில், நேற்று மாலை அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்து சிகிச்சை அளித்தனர், சிகிச்சை முடிந்த நிலையில் நேற்றிரவே அவர் வீடு திரும்பினார்.

கடந்த சில வருடங்களாக உடல்நலக் குறைபாட்டால் இருக்கும், நடிகர் மற்றும் தேமுதிக தலைவரான விஜயகாந்த், அரசியலில் ஈடுபடாமல் ஓய்வில் இருந்து வருகிறார். இவரின் மனைவியும், மகன் உள்ளிட்டோர் தான் கட்சி பணிகளை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.