இரு சூரியன் ஒரு சேர மறைந்ததோ: கலைஞர் குறித்து விஜயகாந்த் கவிதை

  • IndiaGlitz, [Thursday,August 09 2018]

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவால் ஒட்டுமொத்த தமிழகமே சோகத்தில் உள்ள நிலையில் தேமுதிக தலைவர் விஜய்காந்த் நேற்று கதறியழுதபடி ஒரு வீடியோவை வெளியிட்டு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இன்று கருணாநிதியின் மறைவு குறித்து ஒரு கவிதை எழுதி அதனை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த கவிதை இதுதான்

டாக்டர் கலைஞர் அவர்களுக்கு,



உலகமே உங்களை கலைஞரே என்று அழைத்தாலும் உணர்வுப்பூர்வமாக உங்களை
அண்ணா என்று வாஞ்சையோடு அழைத்து
உங்களுடன் பழகிய அந்த நாட்களை
எண்ணி வியக்கிறேன், விம்முகிறேன்.

தள்ளாத வயதிலும் ஓய்வுக்கே ஓய்வு
என்பதன் அர்த்தத்தை 'உழைப்பு'
என்று மாற்றிக்காட்டிய ஒப்பற்ற தலைவரே !

அந்தி சாயும்பொழுது ஒரு சூரியன் மறைவது இயற்கை.
ஆனால் 07.08.2018 அன்று மாலை 6.10 மணியளவில்
இரு சூரியன் ஒரு சேர மறைந்ததோ
என்று என்னும் வண்ணம், இவ்வுலகையே இருட்டாக்கியது
போன்ற ஒரு உணர்வை தந்து சென்றவரே!

உங்கள் உடல் இவ்வுலகை விட்டு பிரிந்தாலும்,
உங்கள் சரித்திரம் சகாப்தமாய்
என்றும் எங்களுடனேயே இருக்கும்
உங்களை வணங்குகிறேன்.

உங்களின் நினைவாக என்றென்றும்...

தமிழன் என்று சொல்லடா!
தலை நிமிர்ந்து நில்லடா!

என்ற உங்கள் வாசகத்துடன்.

இப்படிக்கு
உங்கள் விஜி என்னும் விஜயகாந்த்.

More News

கருணாநிதி மறைவு எதிரொலி: ஹன்சிகா எடுத்த அதிரடி முடிவு

பிரபல நடிகை ஹன்சிகாவின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று அவருடைய பிறந்த நாளுக்கு ரசிகர்களும், சக நடிகர், நடிகைகளும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

காலத்தை வென்ற எழுத்தாளரை இழந்துவிட்டோம்: கருணாநிதி மறைவு குறித்து நயன்தாரா

திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன் தினம் மாலை 6.10 மணிக்கு காலமானதை அடுத்து நேற்றிரவு அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் 24 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது

கருணாநிதி எழுதி வைத்த உயில் இதுதான்: வைரமுத்து

திமுக தலைவர் கருணாநிதி நேற்று சென்னை மெரீனாவில் உள்ள அண்ணா சமாதி அருகே முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

கட்டுக்கடங்காத கூட்டம்: போலீஸ் தடியடியால் இரண்டு பேர் பலி

சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல் இன்னும் சற்று நேரத்தில் அண்ணா சமாதியை நோக்கி ஊர்வலமாக செல்லவிருப்பதால்

அஞ்சலி செலுத்த முடியாத நிலையில் உள்ளேன்: சீயான் விக்ரம் வருத்தம்

திமுக தலைவர் கருணாநிதியின் திடீர் மறைவால் தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி திரையுலகினர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அன்னாருக்கு இறுதி மரியாதை செய்யும் வகையில்