சாணக்கியத் தனத்தை மிஞ்சிய எடப்பாடியின் சாமர்த்தியத்தனம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக சட்டப் பேரவை தேர்தலை ஒட்டி அதிமுக கட்சித் தலைமை பல்வேறு வியூகங்களை வகுத்து கூட்டணியை கட்டமைத்து வருகிறது. இந்தக் கூட்டணி, தொகுதி பங்கீடுகள் அனைத்திலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சாணக்கியத் தன்மையை காட்டி வருகிறார். அந்த வகையில் தேமுதிக விலகலும் கட்சிக்கு நன்மையாகவே பார்க்கப் படுகிறது.
மேலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வெற்றி வியூகத்தால் ஏற்பட்ட தேமுதிகவின் கூட்டணி வெளியேற்றம் அதிமுகவிற்கு தேர்தல் களத்தில் சாதகமான சூழலையே ஏற்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. முதன் முதலில் பா.ம.கவுடன் இடங்களை உறுதி செய்து பின்னர் முதல் வேட்பாளர் பட்டியலையும் அதிமுக அறிவித்து விட்டது.
பா.ம.கவுடன் தொகுதி பங்கீட்டை உறுதி செய்து முதலில் கணக்கை தொடங்கிய அதிமுக, பாஜகவுடன் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தையை சுமூகமாக நடத்தியது. பிடிவாத நிலை காரணமாக தேமுதிக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தன்னிச்சையாக அறிவித்தது. தேமுதிக தற்போது கூட்டணிக்காகச் சிறிய கட்சிகளுடன் கையேந்தும் நிலையில் நிற்பதாகவும் இது முதலமைச்சரின் தேர்தல் வியூகம் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
இது 2011 ஆம் ஆண்டு இல்லை என்று தேமுதிகவிற்கு முதலமைச்சர் சாதுர்யமாக உணர்த்தியுள்ளார். “வழியை விடு காற்று வரட்டும்“ என்ற ரீதியில் அதிமுக தற்போது தனது கூட்டணி கட்சிகளுடன் இன்னும் குஷியாக பேசி வருகிறது. ஆனால் மறுபுறம் உள்ள திமுக இன்னும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையில் சிக்கலைச் சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அதிமுக-திமுக என இருபெரும் இமாலயங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் ஏற்றத்தாழ்வுகளை தேர்தலில்தான் கண்டு கொள்ள முடியும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Kiara Nithya
Contact at support@indiaglitz.com
Comments