சாணக்கியத் தனத்தை மிஞ்சிய எடப்பாடியின் சாமர்த்தியத்தனம்!

தமிழக சட்டப் பேரவை தேர்தலை ஒட்டி அதிமுக கட்சித் தலைமை பல்வேறு வியூகங்களை வகுத்து கூட்டணியை கட்டமைத்து வருகிறது. இந்தக் கூட்டணி, தொகுதி பங்கீடுகள் அனைத்திலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சாணக்கியத் தன்மையை காட்டி வருகிறார். அந்த வகையில் தேமுதிக விலகலும் கட்சிக்கு நன்மையாகவே பார்க்கப் படுகிறது.

மேலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வெற்றி வியூகத்தால் ஏற்பட்ட தேமுதிகவின் கூட்டணி வெளியேற்றம் அதிமுகவிற்கு தேர்தல் களத்தில் சாதகமான சூழலையே ஏற்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. முதன் முதலில் பா.ம.கவுடன் இடங்களை உறுதி செய்து பின்னர் முதல் வேட்பாளர் பட்டியலையும் அதிமுக அறிவித்து விட்டது.

பா.ம.கவுடன் தொகுதி பங்கீட்டை உறுதி செய்து முதலில் கணக்கை தொடங்கிய அதிமுக, பாஜகவுடன் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தையை சுமூகமாக நடத்தியது. பிடிவாத நிலை காரணமாக தேமுதிக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தன்னிச்சையாக அறிவித்தது. தேமுதிக தற்போது கூட்டணிக்காகச் சிறிய கட்சிகளுடன் கையேந்தும் நிலையில் நிற்பதாகவும் இது முதலமைச்சரின் தேர்தல் வியூகம் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

இது 2011 ஆம் ஆண்டு இல்லை என்று தேமுதிகவிற்கு முதலமைச்சர் சாதுர்யமாக உணர்த்தியுள்ளார். “வழியை விடு காற்று வரட்டும்“ என்ற ரீதியில் அதிமுக தற்போது தனது கூட்டணி கட்சிகளுடன் இன்னும் குஷியாக பேசி வருகிறது. ஆனால் மறுபுறம் உள்ள திமுக இன்னும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையில் சிக்கலைச் சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அதிமுக-திமுக என இருபெரும் இமாலயங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் ஏற்றத்தாழ்வுகளை தேர்தலில்தான் கண்டு கொள்ள முடியும்.

More News

நடராஜனுக்கு காயமா? டி20 கிரிக்கெட் போட்டி குறித்து வெளியான பரபரப்பு தகவல்!

இங்கிலாந்துக்கு எதிரான 4 டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று முடிந்தது.

'குக் வித் கோமாளி' அஸ்வின் குறித்து உணர்வுபூர்வ பதிவிட்ட ஷகிலா மகள்: வைரல் புகைப்படம்!

விஜய் டிவியில் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்த 'நாம் தமிழர் கட்சி' சீமான்: என்ன சொன்னார் தெரியுமா?

தல அஜித் அவர்கள் சமீபத்தில் நடைபெற்ற தமிழக அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் 4 தங்கப் பதக்கங்களையும் 2 வெள்ளி பதக்கங்களை வென்றார் என்பதும், அதுமட்டுமின்றி தேசிய அளவில் நடைபெறும்

'வலிமை' அப்டேட் தந்த மாவட்ட கலெக்டர்: வைரல் புகைப்படம்!

அஜித் நடித்து வரும் 'வலிமை' படத்தின் அப்டேட்டை அவரது ரசிகர்கள் கடந்த பல மாதங்களாக கேட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பதும் இருப்பினும் படக்குழுவினர் தரப்பில் இருந்து ஒரு வருடத்திற்கும்

பாதகமான கருத்துக் கணிப்பு பற்றி ஒரு கவலையும் இல்ல… முதல்வர் பதிலடி!

வரும் தமிழகச் சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி பல்வேறு கருத்துக் கணிப்புகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன.