விஜயகாந்த் பட இயக்குநர் மறைவு.. திரையுலகினர் இரங்கல்..!

  • IndiaGlitz, [Friday,December 27 2024]

கேப்டன் விஜயகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் காலமானார். இவருடைய மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கேப்டன் விஜயகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படமான பரதன் என்ற திரைப்படம் கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை இயக்கிய இயக்குனர் சபாபதி நேற்று (வயது 61) காலமானார்.

இயக்குனர் சபா, பரதன் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி, அதன் பிறகு பிரசாந்த் நடித்த எங்க தம்பி, லிவிங்ஸ்டன் நடித்த சுந்தர புருஷன், பிரபுதேவா நடித்த விஐபி, நந்தா நடித்த புன்னகை பூவே உள்ளிட்ட சில தமிழ் படங்களை இயக்கியவர். தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களையும் இவர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உடல் நலக் குறைவு காரணமாக நேற்று அவர் காலமான நிலையில் அவருடைய மறைவு திரையுலகினருக்கு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சபா மறைவு குறித்து நடிகர் அருள் தாஸ், கூறியதாவது:

சபா அவர்களிடம் உதவி இயக்குனராக இருந்தால் சீக்கிரமே இயக்குனர் வேலையை கற்றுக்கொள்ளலாம். சினிமா கதை விவாதம் தொடங்கி, படப்பிடிப்பு, படத்தொகுப்பு, கிராபிக்ஸ், இசை கோப்பு, அனிமேஷன் என எல்லா பணிகளையும் அவர் தனது உதவி இயக்குனர்களுக்கு தெளிவாக கற்றுக்கொடுப்பார். கதை விவாதத்தின் போது உதவி இயக்குனர்களின் கருத்துக்களை கவனமாக அணுகி, முழுமனதோடு ஏற்றுக் கொள்வார். அவர் சில ஆண்டுகளாக தெலுங்கில் ஒரு பெரிய படம் இயக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், அவருடைய மறைவு எங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்று கூறியுள்ளார்.

More News

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு: கமல்ஹாசன், விஜய் இரங்கல் செய்தி..!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று இரவு காலமான நிலையில் அவரது மறைவுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு,  பிரதமர் மோடி, முதல்வர் மு க ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி

எனக்கு முதல்வர் பதவி தருவதாக கூறினார்கள், மறுத்துவிட்டேன்: பிரபல வில்லன் நடிகர்

எனக்கு முதல்வர் பதவி தருவதாக கூறினார்கள். ஆனால் நான் மறுத்துவிட்டேன் என்று பிரபல வில்லன் நடிகர் ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆமாம்.. நீங்கள் கேள்விப்பட்டது உண்மை தான்.. நல்ல விஷயம் சொன்ன ரெடின் கிங்ஸ்லி மனைவி..!

காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா தனது சமூக வலைதளத்தில், "ஆமாம், நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். எங்களுக்கு ஒரு குழந்தை பிறக்கப் போகிறது,"

சொர்க்க வாசல்' உள்பட இந்த வாரம் எத்தனை திரைப்படங்கள்? ஓடிடி ரிலீஸ் தகவல்கள்..!

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி கொண்டிருக்கும் நிலையில் ஏற்கனவே வெளியான திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்றன

நெருக்கமானவரின் மறைவை தாங்க முடியாத த்ரிஷா.. பிரேக் எடுக்க போவதாக அறிவிப்பு..!

நடிகை த்ரிஷா தனது நெருக்கமான ஒரு உயிரின் இழப்பை தாங்க முடியாமல், சில காலம் பிரேக் எடுக்கப் போவதாக அறிவித்துள்ளார். இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.