'சால்ட் அண்ட் பெப்பர்' லுக்கில் விஜயகாந்த் பட நடிகை.. புகைப்படங்களை பார்த்து ஆச்சரியமடைந்த ரசிகர்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜயகாந்த், சுந்தர் சி, ஜீவன் உட்பட பல பிரபலங்களுடன் இணைந்து நடித்த நடிகை ’சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருக்கும் நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
பிரபல மலையாள நடிகையான ஜோதிர்மயி தமிழில் ஜெயம் ரவி நடித்த ’இதயத்திருடன்’, சுந்தர் சி நடித்த ’தலைநகரம்’ விஜயகாந்த் நடித்த ’சபரி’ ஜீவன் நடித்த ’நான் அவன் இல்லை’ உள்பட சில படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பதும் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை ஜோதிர்மயி கடந்த 2004ஆம் ஆண்டு நிஷாந்த் குமார் என்பவரை திருமணம் செய்த நிலையில் ஆறு வருடம் கழித்து அவரை விவாகரத்து செய்து விட்டார். அதன் பிறகு 2015 ஆம் ஆண்டு அமல் நீரத் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் திடீரென ஜோதிர்மயி லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில் அதில் அவர் ’சால்ட் அண்ட் பெப்பர்’ லுக்கில் இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். நடிகை ஜோதிர்மயி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக திரைப்படங்களில் நடிக்காத நிலையில் திடீரென அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com