லஞ்சம் இல்லாத ஆட்சி... அஞ்சாத நீதி: விஜயகாந்த் குடியரசு தின வாழ்த்து

  • IndiaGlitz, [Saturday,January 26 2019]

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் சிகிச்சைக்காக கடந்த சில வாரங்களுக்கு முன் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். இருப்பினும் அவர் அவ்வப்போது தமிழக மக்களுக்கு தனது சமூக வலைத்தள பக்கத்தின் மூலம் செய்திகள் அறிவித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று குடியரசு தின விழாவை முன்னிட்டு விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். லஞ்சம் இல்லாத ஆட்சி, யாருக்குக்ம் அஞ்சாத நீதி, நேர்மையான தேர்தல் மூலம் மக்களோடு இணைந்து ஆட்சியை உருவாக்கி தமிழகத்தை முதன்மையான மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம், நன்றி வணக்கம்' என்று அந்த வீடியோவில் விஜயகாந்த் கூறியுள்ளார்.

விஜயகாந்த் உடல்நலம் குறித்து சமூக ஊடகங்களில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வதந்திகள் வெளியாகி வரும் நிலையில் இந்த வீடியோ அனைத்து வதந்திகளையும் தவிடுபொடியாக்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

More News

அசுரன் படத்தின் அடுத்த ஸ்டில் தெரிவிக்கும் செய்தி!

தனுஷ் நடிக்கும் 'அசுரன்' படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கவுள்ளது. மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நேற்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றது.

மோகன்லால், பிரபுதேவா உள்பட 112 பேர்களுக்கு பத்ம விருதுகள்: முழுவிபரம்

நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் பிரபுதேவா உள்பட மொத்தம் 112 பேர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அருண்விஜய்யின் 'தடம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் அருண்விஜய் நடித்து முடித்துள்ள 'தடம்' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

ரஜினிக்கு மறைமுக ஆதரவு கொடுத்த கமல்!

ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்கி அரசியலில் குதிக்கவுள்ள நிலையில் அவர் மீது ஒருசிலர் வைக்கும் முக்கிய விமர்சனம் 'ரஜினிகாந்த் தமிழர் இல்லை, தமிழர் அல்லாத ஒருவர் தமிழ்நாட்டை ஆளக்கூடாது'

அரை மணி நேரம் முந்திய 'அசுரன்' ஃபர்ஸ்ட்லுக்

தனுஷ் நடிக்கும் 'அசுரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகவுள்ளதாக