தனியார் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதி!

  • IndiaGlitz, [Saturday,September 01 2018]

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று புத்துணர்ச்சியுடன் திரும்பிய தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், தனது கட்சி வரும் பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் என அறிவித்தார். இதனால் தேமுதிக தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் போரூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனையடுத்து அவரது உடல்நிலை குறித்து வதந்திகள் பரவி வருவதால் தேமுதிக தலைமை அலுவலகம் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

'தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நலமுடன் இருக்கிறார். வதந்திகளை நம்ப வேண்டாம்'. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

More News

இந்த தேசம் இரண்டு கட்சிகளுக்கு இடையே சிக்கியுள்ளது: பிரபல நடிகரின் டுவீட்

கடந்த சில நாட்களாகவே மத்தியில் ஆளும் பாஜகவுக்கும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் ரஃபேல்ஸ் போர் விமான ஒப்பந்தம் குறித்த சர்ச்சைகள் ஏற்பட்டு வருகிறது.

மனைவியுடன் கள்ளத்தொடர்பு: நண்பரை கொன்று வீசிய கணவர்

துணை நடிகை விஷ்ணுப்ரியாவின் காதலன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அவரது தந்தையால் கொடைக்கானலில் கொலை செய்த நிலையில் தற்போது அதே கொடைக்கானலில் மீண்டும் ஒரு கள்ளக்காதல் கொலை நடந்துள்ளது.

'வடசென்னை' படத்தின் இசையமைப்பாளர் தனுஷ்?

கோலிவுட் திரையுலகில் நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர், என பல பரிமாணங்களை கொண்டுள்ள தனுஷ் தற்போது இசையமைப்பாளராகவும் மாறியுள்ள தகவல் வெளிவந்துள்ளது.

கமல், ரஜினி, விஷால் இல்லை: அடுத்த முதல்வர் விஜய்தான்

முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோர் காலமானதை அடுத்து தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வெற்றிடத்தை நிரப்ப ஏற்கனவே கமல், ரஜினி மற்றும் விஷால் அரசியல் களத்தில் இறங்கிவிட்டனர்.

கேரள முதல்வரிடம் நிவாரண நிதியளித்த 80களின் நாயகிகள்

கோலிவுட் திரையுலகில் கடந்த 80களில் கொடிகட்டி பறந்த நடிகர், நடிகைகள் ஒவ்வொரு வருடமும் கூடி தங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்வதை வழக்கமாக உள்ளனர்