80 தொழிலாளர்களை மதுரையில் இருந்து அழைத்து வந்த விஜயகாந்த் ரசிகர்.. விமான செலவு மட்டும் ரூ.8 லட்சம்..!

  • IndiaGlitz, [Wednesday,January 31 2024]

விஜயகாந்த் ரசிகர் ஒருவர் தன்னிடம் வேலை பார்க்கும் 80 தொழிலாளர்களை விஜயகாந்த் நினைவு இடத்தை பார்ப்பதற்கு விமானத்தில் சொந்த செலவில் அழைத்து வந்ததாக வெளிவந்திருக்கும் செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேப்டன் விஜயகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன் காலமான நிலையில் அவரது நினைவிடத்தை பார்க்க தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான பேர் இந்த நினைவு இடத்திற்கு வந்து மரியாதை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜயகாந்தின் தீவிர ரசிகரான மதுரையை சேர்ந்த மாயன் என்பவர் தன்னிடம் பணிபுரியும் 80 தொழிலாளர்களை சொந்த செலவில் மதுரையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்து வந்துள்ளார். இதற்கான விமான செலவு மட்டும் ரூபாய் 8 லட்சம் ஆனதாக தெரிகிறது.

தொழிலாளர்களை விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக மாயன் அழைத்து வந்த இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்துக்கு இன்னும் தீவிர ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்த செய்திக்கு கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.