80 தொழிலாளர்களை மதுரையில் இருந்து அழைத்து வந்த விஜயகாந்த் ரசிகர்.. விமான செலவு மட்டும் ரூ.8 லட்சம்..!

  • IndiaGlitz, [Wednesday,January 31 2024]

விஜயகாந்த் ரசிகர் ஒருவர் தன்னிடம் வேலை பார்க்கும் 80 தொழிலாளர்களை விஜயகாந்த் நினைவு இடத்தை பார்ப்பதற்கு விமானத்தில் சொந்த செலவில் அழைத்து வந்ததாக வெளிவந்திருக்கும் செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேப்டன் விஜயகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன் காலமான நிலையில் அவரது நினைவிடத்தை பார்க்க தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான பேர் இந்த நினைவு இடத்திற்கு வந்து மரியாதை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜயகாந்தின் தீவிர ரசிகரான மதுரையை சேர்ந்த மாயன் என்பவர் தன்னிடம் பணிபுரியும் 80 தொழிலாளர்களை சொந்த செலவில் மதுரையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்து வந்துள்ளார். இதற்கான விமான செலவு மட்டும் ரூபாய் 8 லட்சம் ஆனதாக தெரிகிறது.

தொழிலாளர்களை விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக மாயன் அழைத்து வந்த இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்துக்கு இன்னும் தீவிர ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்த செய்திக்கு கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.

More News

முதலிரவில் சரக்கு ஊற்றி கொடுக்கும் மிருணாளினி .. விஜய் ஆண்டனியுடன் மொரட்டு ரொமான்ஸ்..!

விஜய் ஆண்டனி நடித்த 'ரோமியோ' என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புதிய போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. அதில் முதலிரவில் விஜய் ஆண்டனி

டிஸ்னி+ ஹாட்ஸ்டார்,  ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ்

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அடுத்ததாக வெளியிடவுள்ள  ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “ஹார்ட் பீட்” சீரிஸிலிருந்து “ஹார்ட் பீட் பாட்டு” எனும் பெப்பியான பாடலை வெளியிட்டுள்ளது. 

த்ரிஷா குறித்து சர்ச்சை பேச்சு.. ரூ.1 லட்சம் அபராதம் செலுத்தாத மன்சூர் அலிகான்.. நீதிபதியின் அதிரடி உத்தரவு..!

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக நீதிமன்றம் நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்த நிலையில் அந்த அபராதத்தை அவர் செலுத்தாத நிலையில் நீதிபதி

நான் பார்த்த விஜயகாந்தை கொண்டாடணும்னு இந்த படத்தை எடுத்தேன்: இயக்குனர் பச்சமுத்து..!

 கார்த்திக் சுப்புராஜ் எப்படி ஒரு ரஜினிகாந்தின் தீவிர ரசிகரோ, லோகேஷ் கனகராஜ் எப்படி ஒரு கமல்ஹாசனின் ரசிகரோ, அது போல் நான் விஜயகாந்தின் தீவிர ரசிகன், நான் பார்த்து கொண்டாடிய விஜயகாந்துக்கு

'ரோஜா' சீரியல் சிபு சூரியன் மகனா இவர்? வைரல் புகைப்படம்..!

சன் டிவியில் ஒளிபரப்பான 'ரோஜா' என்ற சீரியலில் நாயகனாக நடித்த சிபு சூரியன் தனது மகனின் பிறந்த நாளை முன்னிட்டு புகைப்படம் வெளியிட்டுள்ள நிலையில் இவருக்கு இவ்வளவு பெரிய மகனா?