தேர்தல் பிரச்சார களத்தில் விஜயகாந்த்! தொண்டர்கள் உற்சாகம்
Send us your feedback to audioarticles@vaarta.com
அதிமுக கூட்டணியில் ஒருசில சர்ச்சைகளுக்கு பின் இணைந்த தேமுதிக, அக்கூட்டணியிடம் கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர், வடசென்னை ஆகிய நான்கு தொகுதிகளை பெற்றது. இருப்பினும் உடல்நிலை காரணமாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் செய்யவில்லை. அவருடைய மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதாவும், விஜயகாந்தின் மகன் பிரபாகரனும் கடந்த சில நாட்களாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஏப்ரல் 15ஆம் தேதி விஜயகாந்த் பிரச்சாரம் செய்வார் என நேற்று பிரேமலதா தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் அறிவித்தார். அதன்படி நாளை வடசென்னை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜை ஆதரித்து விஜயகாந்த் பிரச்சாரம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் தேமுதிக தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
நாளை மறுநாளுடன் அதாவது ஏப்ரல் 16ஆம் தேதியுடன் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் முடிவடையவுள்ள நிலையில் கடைசி நேரத்தில் விஜயகாந்த் தேர்தல் பிரச்சார களத்தில் இறங்குவது அதிமுக கூட்டணிக்கு கூடுதல் பலனை தருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments