சர்வதேச விருது: விஜய்க்கு விஜயகாந்த் வாழ்த்து

  • IndiaGlitz, [Sunday,September 23 2018]

தளபதி விஜய் 'மெர்சல்' படத்தில் சிறப்பாக நடித்ததற்காக IARA விருதுகளின் சிறந்த சர்வதேச நடிகர் என்ற விருதினை வென்றார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த விருதை பெற்ற முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ள விஜய்க்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் கேப்டன் விஜயகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: சர்வதேச சாதனையாளர் அங்கீகார விருதுகள் (IARA) என்ற அமைப்பின் சார்பில், மெர்சல் படத்துக்காக சிறந்த சர்வதேச நடிகர் என்ற விருதை வென்ற நடிகர் விஜய் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இதேபோல் மேலும் பல விருதுகள் பெற்று தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்' என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்துடன் விஜய் குழந்தை நட்சத்திரமாக 'வசந்த ராகம், 'வெற்றி' மற்றும் 'சட்டம் ஒரு விளையாட்டு' ஆகிய படங்களிலும், ஹீரோவாக 'செந்தூரப்பாண்டி' என்ற படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

ரொமான்ஸ், ஆக்சன், செண்டிமெண்ட் கலந்த 'வர்மா': டீசர் விமர்சனம்

சீயான் விக்ரம் மகன் துருவ் அறிமுகத்தில் தேசிய விருது பெற்ற பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள 'வர்மா' திரைப்படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய்க்கு கிடைத்த சர்வதேச அளவிலான மரியாதை

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு விருதுகளை பெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

இது அடல்ட்ஸ் ஒன்லி ஷோ அல்ல: விஜிக்கு ஞாபகப்படுத்திய கமல்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வாரம் வந்துவிட்டதை அடுத்து பிக்பாஸ் ஒரு இன்ப அதிர்ச்சியாக இறுதி போட்டிக்கு தேர்வானவர்களை அவர்களுடைய குடும்பத்தினர்களூடன் தொலைபேசியில் பேசும் வாய்ப்பை வழங்கினார்.

சர்ச்சைக்குரிய பேச்சு: நடிகர் கருணாஸ் கைது!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் காவல்துறை உயரதிகாரி ஒருவரை சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் சர்ச்சைக்குரிய வகையில் நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் பேசியதை

பிரபல தமிழக அரசியல்வாதிக்கு ஆபத்து: சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார்

தமிழகத்தின் அடுத்த முதல்வர் கனவில் இருப்பவர்களில் ஒருவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளும் அரசியல் அமைப்பு ஒன்றின் தலைவியுமான தீபா