தேர்தல் என்பது கேலிக்கூத்தா? தேர்தல் ஆணையத்திற்கு விஜயகாந்த் கண்டனம்
- IndiaGlitz, [Monday,January 07 2019]
திருவாரூர் தொகுதியில் நடைபெற திட்டமிட்டிருந்த இடைத்தேர்தல் ரத்து என இன்று காலை தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு பெரும்பாலான அரசியல் கட்சிகளின் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் ஒருசில கட்சிகள் தேர்தல் ஆணையத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
அந்த வகையில் தற்போது அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், 'திருவாரூர் தேர்தல் ரத்து குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
ஜனநாயக நாட்டில் தேர்தல் என்பது கேலிக்கூத்தாகவும், கேள்விக்குறியாகவும் மாறியிருப்பதை தேமுதிக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். மக்கள் யாரும் தேர்தல் வேண்டும் என்று கேட்கவில்லை; வேண்டாம் என்றும் சொல்லவும் இல்லை. கஜா புயல் பாதிப்பை அறியாமல் தேர்தல் தேதியை ஆணையம் அறிவித்ததை மக்கள் கேலிக்கூத்தாக பார்க்கின்றன என விஜாகாந்த் தெரிவித்துள்ளார்.