கர்ப்பிணி யானை கொலை குறித்து விஜயகாந்த் கருத்து:

கேரளாவில் உள்ள பாலக்காடு அருகே மலப்புரம் என்ற பகுதியில் கர்ப்பிணி யானை ஒன்றுக்கு வெடிமருந்து வைத்த அன்னாசிப் பழத்தைக் கொடுத்து அந்த கிராமத்தினர் கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொடூர செயலுக்கு திரையுலக பிரபலங்கள் பலர் தங்களது சமூக வளைதளத்தில் கண்டனங்களை பதிவு செய்தனர்.

மேலும் விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் என ஒட்டுமொத்த இந்தியாவும் யானையின் கொலைக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த கொடூர செயலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில் தற்போது இதுகுறித்து நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் தனது கருத்தை குறிப்பிட்டுள்ளார்.

கர்ப்பிணி யானையை கொன்ற மர்ம நபர்களுக்கு மிகப் பெரிய தண்டனையை வழங்க வேண்டும் என்றும் விலங்குகள் காக்கப்படும் போது தான் மனித குலமும் காக்கப்படும் என்றும் வாயில்லாத ஜீவன்களிடம் நாம் அனைவரும் அன்பு காட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். விஜயகாந்தின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் ஆதரவு குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மத்திய அமைச்சருக்கு நன்றி கூறிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்காரியால் அவர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

அஜித் படத்திற்கு இணையானது நயன்தாரா படம்: ஆர்ஜே பாலாஜி

'நேர்கொண்ட பார்வை' படத்தில் சொல்லப்பட்டிருந்த கண்டெண்ட் அஜித் போன்ற பெரிய ஸ்டார் நடித்ததால் எப்படி அனைவரிடமும் போய் சேர்ந்ததோ அதே போல் 'மூக்குத்தி அம்மன்'

காங்கிரஸ் கொடுத்த ஆஃபர்: தட்டிக் கழித்த பிரசாந்த் கிஷோர்!!! அரசியலில் நடக்கும் சுவாரசியம்!!!

இந்திய அரசியல் மட்டத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியல் ஆலோசனைகளை வகுத்து கொடுப்பது சில காலமாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கை: கடும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கும்  ஹோமியோபதி மருந்து!!!!!!

கடந்த ஜனவரி 29 ஆம் தேதி இந்திய ஆயுஷ் அமைச்சகம் கொரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்கு ஹோமியோபதி மற்றும் யுனானி மருந்துகள் பெரிதும் உதவியாக இருக்கும் என்ற முடிவை வெளியிட்டது.

கொரோனாவுக்காக தனியார் மருத்துவமனை சென்றால் சொத்தை விற்கணுமா? கட்டணம் விபரம்

தமிழகத்தில் கொரனோ வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் ஆயிரக்கணக்கில் குவிந்து வருவதால் அரசு மருத்துவமனைகளில் கிட்டத்தட்ட அனைத்திலும்