கர்ப்பிணி யானை கொலை குறித்து விஜயகாந்த் கருத்து:
- IndiaGlitz, [Thursday,June 04 2020]
கேரளாவில் உள்ள பாலக்காடு அருகே மலப்புரம் என்ற பகுதியில் கர்ப்பிணி யானை ஒன்றுக்கு வெடிமருந்து வைத்த அன்னாசிப் பழத்தைக் கொடுத்து அந்த கிராமத்தினர் கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொடூர செயலுக்கு திரையுலக பிரபலங்கள் பலர் தங்களது சமூக வளைதளத்தில் கண்டனங்களை பதிவு செய்தனர்.
மேலும் விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் என ஒட்டுமொத்த இந்தியாவும் யானையின் கொலைக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த கொடூர செயலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில் தற்போது இதுகுறித்து நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் தனது கருத்தை குறிப்பிட்டுள்ளார்.
கர்ப்பிணி யானையை கொன்ற மர்ம நபர்களுக்கு மிகப் பெரிய தண்டனையை வழங்க வேண்டும் என்றும் விலங்குகள் காக்கப்படும் போது தான் மனித குலமும் காக்கப்படும் என்றும் வாயில்லாத ஜீவன்களிடம் நாம் அனைவரும் அன்பு காட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். விஜயகாந்தின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் ஆதரவு குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கர்ப்பிணி யானையை வெடிவைத்து கொன்ற மர்மநபர்களுக்கு மிகப்பெரிய தண்டனையை வழங்க வேண்டும்.
— Vijayakant (@iVijayakant) June 4, 2020
விலங்குகள் காக்கும்போது தான் மனித குலமும் காக்கப்படும். மேலும் வாய் இல்லாத ஜீவன்களிடம் நாம் அனைவரும் அன்பு காட்ட வேண்டும்.#KeralaElephantMurder pic.twitter.com/sVkCZQ6jRq