விஜயகாந்த் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு: மருத்துவமனையாக மாறும் கல்லூரி
- IndiaGlitz, [Thursday,April 09 2020]
கொரோனா வைரஸால் தமிழகத்தில் தினந்தோறும் 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் பொதுமக்களும், திரையுலக பிரபலங்களும், அரசியல் கட்சி தலைவர்களும் அரசுக்கு பல்வேறு வகையில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த், கொரோனா சிகிச்சைக்காக தன்னுடைய தேமுதிக அலுவலகம் மற்றும் ஆண்டாள் அழகர் கல்லூரியை பயன்படுத்தி கொள்ளுமாறு தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். விஜயகாந்தின் இந்த வேண்டுகோளை தற்போது தமிழக அரசு ஏற்றுக்கொண்டு, ஆண்டாள் அழகர் கல்லூரியை மருத்துவமனையாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்கு நன்றி கூறி விஜயகாந்த் தனது சமூக வலைத்தில் கூறியிருப்பதாவது: கொரானாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சையளிக்க ஆண்டாள் அழகர் கல்லூரியையும், தேமுதிக தலைமை கழகத்தையும் பயன்படுத்திக்கொள்ள விடுத்த வேண்டுகோளை ஏற்று, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரு. ஜான், DRO திருமதி. பிரியா, செங்கல்பட்டு SP திரு. கண்ணன், மதுராந்தகம் DSP திரு. கந்தன், செங்கல்பட்டு RDO திரு. செல்வம், மதுராந்தகம் RDO திருமதி. லட்சுமி, உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை ஆய்வு செய்தனர்
தற்போது கல்லூரி விடுதிகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு மக்களுக்கு பயன்படும் வகையில் தயார் நிலையில் உள்ளது. எனது வேண்டுகோளை ஏற்று உடனடி நடவடிக்கை மேற்கொண்ட தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’என்று விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் கமல்ஹாசன், வைரமுத்து உள்பட இன்னும் பலர் தங்களுடைய இடத்தை கொடுக்க முன்வந்துள்ளதையும் சுட்டிக்காட்டிய நெட்டிசன்கள் அவர்களுடைய இடங்களையும் கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
கொரானாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சையளிக்க ஆண்டாள் அழகர் கல்லூரியையும், தேமுதிக தலைமை கழகத்தையும் பயன்படுத்திக்கொள்ள விடுத்த வேண்டுகோளை ஏற்று,
— Vijayakant (@iVijayakant) April 8, 2020
இன்று (08/04/2020 ) செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரு. ஜான், DRO திருமதி. பிரியா, (1-3)@CMOTamilNadu pic.twitter.com/8NnNYsaWyO
தற்போது கல்லூரி விடுதிகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு மக்களுக்கு பயன்படும் வகையில் தயார் நிலையில் உள்ளது.
— Vijayakant (@iVijayakant) April 8, 2020
எனது வேண்டுகோளை ஏற்று உடனடி நடவடிக்கை மேற்கொண்ட தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். (3-3)@CMOTamilNadu pic.twitter.com/J6qN3iPZro