குடும்பத்துடன் செல்பி எடுத்து பிறந்த நாளை கொண்டாடிய கேப்டன் விஜயகாந்த்!

  • IndiaGlitz, [Tuesday,August 25 2020]

நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் இன்று தனது பிறந்தநாளை குடும்பத்துடன் செல்பி எடுத்து கொண்டாடினார் என்பதும் இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத அரசியல் தலைவர்களில் ஒருவர் விஜயகாந்த். இவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இன்று காலை தனது வீட்டில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விஜயகாந்த், அதன் பின்னர் மனைவி மற்றும் மகன்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார். இந்த செல்பி புகைப்படங்கள் விஜயகாந்தின் அதிகாரபூர்வமான சமூக வலைதளப் பக்கத்தில் வெளியானதை அடுத்து இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன

இன்று பிறந்தநாளை கொண்டாடி வரும் விஜயகாந்த் அவர்களுக்கு திரையுலகினர்கள், அரசியல்வாதிகள் உட்பட பலரும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலமும் தொலைபேசி மூலமும் தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் தங்களது டுவிட்டர் பக்கங்களில் விஜயகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர் என்பதும், அதற்கு விஜயகாந்த் தனது நன்றியை தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இன்று பிறந்தநாளை கொண்டாடி வரும் விஜயகாந்த் அவர்களுக்கு நம்முடைய மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்