மீண்டு வா நண்பா.. நண்பரின் உடல்நலத்திற்கு பிரார்த்தனை செய்த கேப்டன்
Send us your feedback to audioarticles@vaarta.com
கேப்டன் விஜயகாந்த் நடித்த கருப்பு நிலா, சக்கரைத்தேவன், தாய் மொழி, பரதன் போன்ற பல படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளரும் விஜயகாந்த் அவர்களின் நெருங்கிய நண்பருமான இப்ராஹிம் ராவுத்தர் உடல்நலமின்றி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
விஜயகாந்த் நடித்த பல படங்களின் தயாரிப்பாளராக மட்டுமின்றி அவருடைய சிறுவயது தோழனாகவும் இருந்தவர் இப்ராஹிம். விஜயகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்தவுடன் அந்த கட்சியில் பணியாற்றிய இப்ராஹிம், பின்னர் விஜயகாந்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது கட்சியில் இருந்து விலகி வேறு கட்சியில் இணைந்தார்.
தன்னை விட்டும், தன்னுடைய கட்சியில் இருந்தும் பிரிந்து சென்றாலும், சிறுவயது நட்பை மறக்காத விஜய்காந்த், நேற்று தனது மனைவி பிரேமலதாவுடன் இப்ராஹிம் இராவுத்தரை மருத்துவமனையில் சென்று பார்த்தார். அவர் சென்ற நேரத்தில் இப்ராஹிம் தூக்கத்தில் இருந்தாலும், அவர் நலமடைய இறைவனை பிரார்த்திப்பதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து விஜய்காந்த் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: நண்பா, நீ உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாய் என்ற செய்தி கேட்டு வேதனையுடன் உன்னை உடல் நலம் விசாரிக்க வந்தேன். அங்கு நீ சுயநினைவு கூட இல்லாத நிலையில் கட்டிலில் இருந்ததை கண்டதும் என் மனம் பட்ட துயரத்தை நான் மட்டுமே அறிவேன். உன்னை கண்டவுடன் சிறுவயது முதல் நாம் கொண்ட உண்மையான நட்பும் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற உறுதியோடு மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து சினிமா உலகில் போராடி நாம் பெற்ற வெற்றி தோல்விகளும் என் கண் முனே வந்து சென்றது. காலத்தின் ஓட்டத்தில் எத்தனையோ மன கஷ்டங்களும், சந்தோஷங்களும் வந்து சென்றிருந்தாலும் என்றுமே உன்னை என் மனம் மறந்ததில்லை. இப்ராஹிம் நீ மீண்டும் நல்ல ஆரோக்கியத்தோடு நலம் பெற்று வர வேண்டும் என்று என் பிரார்த்தனையை கடவுளிடத்திலே வைக்கிறேன். நண்பா மீண்டு வா, எழுந்து வா
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout