கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.1 கோடி அறிவித்த கேப்டன் விஜயகாந்த்
- IndiaGlitz, [Wednesday,November 21 2018]
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேமுதிக சார்பில் ஒரு கோடி ரூபாய்க்கு நிவாரணப்பொருட்கள் வழங்கப்படும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
கஜா புயலால் தங்களுடைய வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் டெல்டா பகுதி மக்களின் நிவாரண உதவிக்காக அரசியல் கட்சிகளும், திரையுலக பிரமுகர்களும் தாராளமாக உதவி செய்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த், கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.1 கோடி அறிவித்துள்ளார். ரூ.1 கோடி மதிப்பில் நிவாரண பொருட்களாக வழங்க முடிவு செய்துள்ள விஜயகாந்த் நேற்று முதல் கட்டமாக திருவாரூர், நாகை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார். பின் இரண்டாம் கட்டமாக தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல் போன்ற பகுதிகளுக்கும் நேரடியாக சென்று நிவாரண உதவிகளை வழங்கினார்.
#கஜாபுயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு
— Vijayakant (@iVijayakant) November 21, 2018
தேமுதிக சார்பில் ஒரு கோடி ரூபாய்க்கு
நிவாரணப்பொருட்கள் வழங்கப்படும்! #SaveDelta #DMDK4thePeople pic.twitter.com/JT5bGx8di0