close
Choose your channels

விஜய் அடுத்த படத்தில் விஜயகாந்த்.. தளபதியின் வேற லெவல் மாஸ் திட்டம்..!

Saturday, February 10, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ’கோட்’ திரைப்படத்தில் விஜயகாந்த் ஒரு கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும், அவருடைய கேரக்டரை ஏஐ மூலம் உருவாக்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’கோட்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 50% முடிந்து விட்டதாக கூறப்படும் நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் இதற்காக வெளிநாடு செல்ல படக்குழுவினர் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே ஒரு பெரும் நட்சத்திரக் கூட்டமே இருக்கும் நிலையில் தற்போது ஏஐ மூலம் விஜயகாந்த் கேரக்டரை உருவாக்கி இருப்பதாகவும் இதற்காக விஜயகாந்த் குடும்பத்திடம் வெங்கட் பிரபு அனுமதி பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஜய் ஆரம்பகால நடிகராக இருந்தபோது அவருக்காக ’செந்தூரப் பூவே’ என்ற திரைப்படத்தில் விஜயகாந்த் நடித்துக் கொடுத்தார் என்பதும் அந்த படம் விஜய்யின் திரை உலக வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய நிலையில் அதற்கு நன்றி கடனாக விஜயகாந்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் ’கோட்’ திரைப்படத்தில் அவருடைய கேரக்டர் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மொத்தத்தில் கேப்டன் ரசிகர்களை முழுக்க கவர வேண்டும் என்பதற்காக மட்டுமின்றி தனது அரசியல் எதிர்காலத்திற்கும் கேப்டன் ரசிகர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் தான் விஜய் வேற லெவலில் யோசித்து இந்த கேரக்டரை உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment