விஜயகாந்துக்கு என்ன ஆச்சு? வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை என தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு மீண்டும் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை மியாட் மருத்துவமனையில் தற்போது விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் வழக்கமான மருத்துவ சோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
மேலும் விஜயகாந்துக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை நடைபெற்று வருவதாகவும் விஜயகாந்த் உடல்நிலையை 24 மணி நேரமும் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் உடல்நல குறைவால் சென்னை மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் சமீபத்தில் தான் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதன்பின் அவர் தேமுதிக பொதுக்குழுவில் கலந்து கொண்ட நிலையில் மீண்டும் அவர் உடல் நலக்குறைவு காரணமாக குறிப்பாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவரது கட்சி தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனை அடுத்து விரைவில் விஜயகாந்த் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com