கஜா புயல்னா… கரெண்டா வருவாய்… கொரோனா-ன்னா… பிரச்சாரத்தில் பட்டையை கிளப்பும் விஜயபாஸ்கர் மகள்!
- IndiaGlitz, [Friday,March 26 2021]
கடந்த 2016 ஆம் வருடம் நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் விராலிமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றவர் விஜயபாஸ்கர். இவர் தமிழக சுகாதாரத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். இவருடைய அமைச்சர் பதவி காலத்தில் கஜா, நிவர், புரெவி, இதையெல்லாம்விட பெரும் நோய்த்தொற்றான கொரோனா நோய்த்தொற்றை சந்தித்தார். இத்தகைய இக்கட்டான சூழ்நிலைகளில் பணியாற்றிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அதிமுக கட்சி சார்பிலும் பொதுமக்கள் சார்பிலும் நற்பெயர் இருந்து வருகிறது.
இந்நிலையில் விராலிமலை தொகுதியில் அவர் 3 ஆம் முறையாக களம் காணுகிறார். இதற்கான தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அவர் தன்னுடைய வாகனத்தில் ஒரு சிறுமியை வைத்துக் கொண்டு பிரச்சாரம் செய்வதை பார்த்து அனைவரும் யார் என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அந்த சிறுமி “நான் விஜயபாஸ்கரோட இரண்டாவது பொண்ணு” என்றதும் அங்கு கூடியிருந்த அனைவரும் கரவொலி எழுப்பி ஆரவாரம் தெரிவித்தனர்.
இதையடுத்து மைக்கை பிடித்து பேச ஆரம்பித்த அந்த சிறுமி, “எங்க அப்பா இரவும் பகலும் உங்களுக்காகத்தான் உழைக்கிறார். எப்பவும் உங்களுக்காகத்தான் உழைப்பார். உங்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் அவர் துடித்துப் போய்விடுவார்.
உங்களுக்கு காது கேட்கலைன்னா காது மெஷினா வருவார். கண்ணு தெரியலைன்னா கண்ணாடியா வருவார். கஜா புயல்னா கரெண்ட் வருவார். தீபாவளி பொங்கலை எங்களோடு கொண்டாடுவதை விட உங்களுடன் கொண்டாடுவதைத்தான் அவர் விரும்புவார். எங்க அப்பான்னு சொல்றத விட அவர் உங்க வீட்டுப் பிள்ளை. உங்க வீட்டு பிள்ளைக்கு இரட்டை இலையில் ஓட்டு போடுவீங்களா. நம்ம சின்னம் இரட்டை இலை எனக் கூட்டத்தினரை நோக்கி உற்சாகமாய் பேசினார்.
இதுகுறித்து தெரிவித்த விஜயபாஸ்கர், “விராலிமலை தொகுதியில் தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் என்னோடு என் இளைய மகள்… மக்களின் பேராதரவுடன் மகத்தான “வெற்றி“ காண பயணம்! எனத் தனது டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார். இந்தப் பதிவு சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி வருகிறது.
விராலிமலை தொகுதியில் தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் என்னோடு என் இளைய மகள்...
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 25, 2021
மக்களின் பேராதரவுடன்
மகத்தான ‘வெற்றி’காண பயணம்!#முன்னேற்றத்திற்கானகுரல்#vijayabaskar_voiceforprogress#VijayabaskarforViralimalai#வெற்றி_நடைபோடும்_தமிழகம்#AIADMK#TNElection2021 pic.twitter.com/OV5xd4xyp3