அரசியலில் விஜய்க்கு சீனியர் எனது மகன் விஜய பிரபாகரன்.. பிரேமலதா

  • IndiaGlitz, [Saturday,August 24 2024]

சமீபத்தில் விஜய், கேப்டன் விஜயகாந்த் வீட்டிற்கு சென்ற நிலையில் அன்றைய தின கலந்துரையாடல் குறித்து இன்று செய்தியாளர்களிடம் பிரேமலதா விளக்கினார். அவர் கூறியதாவது:

விஜய் எங்கள் வீட்டுக்கு வருவது புதிது கிடையாது, எங்கள் வீட்டு பக்கத்தில் தான் விஜய் பல ஆண்டு காலம் இருந்தார். கேப்டனுக்கும் எஸ்எஸ்சி சார் அவர்களுக்கும் உள்ள நட்பு என்ன என்பது இந்த உலகத்திற்கே தெரியும்.

விஜய் வீட்டுக்கு வருவது என்பது புதிது கிடையாது, பலமுறை எங்கள் வீட்டிற்கு வந்துள்ளார், இப்போது அவர் அரசியல் கட்சி ஆரம்பித்தவுடன் வந்ததால் நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள், விஜய் எப்போதும் எங்கள் வீட்டுக்கு வருவது போல் தான் அன்றைய தினமும் வந்தார், அவர் எங்கள் வீட்டு பிள்ளைகளில் ஒருவர்.

விஜய், சண்முக பாண்டியன், விஜய் பிரபாகரன் ஆகிய மூவரும் மனம் விட்டு பேசிக் கொண்டிருந்தனர். ‘சினிமாவில் நீங்கள் தான் அண்ணா எங்களுக்கு முன்னுதாரணம் என்று சண்முக பாண்டியன் கூறிய போது, அதற்கு விஜய் ’விஜய் பிரபாகரன் தான் எனக்கு அரசியலில் சீனியர், சிறப்பாக பேசுகிறாய், வாழ்த்துக்கள், அதே மாதிரி செய்தியாளர்களையும் சிறப்பாக ஹேண்டில் பண்ணுகிறாய், உனக்கு எனது வாழ்த்துக்கள் என்று விஜய் கூறினார். இளைஞர்களுக்குள் ஒரு நல்ல நட்பு பேச்சுவார்த்தை அன்றைய கலந்துரையாடலில் இருந்தது.

அது மட்டுமின்றி தயாரிப்பாளர் அர்ச்சனா, இயக்குனர் வெங்கட் பிரபு ஆகியோர் அன்றைய தினம் வந்திருந்தார்கள். வெங்கட் பிரபுவை எனக்கு சின்ன வயதில் இருந்தே தெரியும். எனவே அது ஒரு குடும்ப சந்திப்பு மாதிரி தான் இருந்தது’ என்று பிரேமலதா கூறினார்.