குகைக்குள் இருந்தாலும் சிங்கம் சிங்கம்தான்: சின்னகேப்டன் விஜயபிரபாகரன் ஆவேசம்
Send us your feedback to audioarticles@vaarta.com
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக சற்றுமுன் பிரிந்ததை அடுத்து நிர்வாகிகள் கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் ஆவேசமாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இதுவரை சாணாக்கியனாக இருந்த நாங்கள் இனி சத்ரியனாக இருப்போம் என்றும் குகைக்குள் இருந்தாலும் சிங்கம் சிங்கம்தான் என்றும் அவர் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் தேமுதிக கொடி பட்டிதொட்டி எங்கும் பரந்து விரிந்துள்ளது என்றும் தலையே போனாலும் தன்மானம் இழக்க மாட்டோம் என்றும், தேமுதிக யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்றும் விஜயபிரபாகரன் கூறினார்
மேலும் ஜாதியை பற்றி எனக்கு தெரியாது என்றும், எங்களுக்கு தேமுதிக தான் ஜாதி, கேப்டன் தான் கடவுள் என்றும் அவர் பேசினார். மேலும் காமராஜரையே தோற்கடித்த ஊர் தான் இந்த ஊர் என்றும், எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி தோல்வியடைவார் என்றும் விஜயபிரபாகரன் ஆவேசமாக கூறினார்
இலவசம் என்று கூறி மக்களை சோம்பேறி ஆக்கி விட்டார்கள் என்றும் தேமுதிகவில் உள்ளவர்கள் காசுக்காக கட்சி நடத்துகிறார்கள் என்று யாராவது நிரூபியுங்கள் பார்ப்போம் என்றும் அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இந்த நிலையில் நேற்று வரை கூட்டணிக்காக பேச்சுவார்த்தை நடத்திவிட்டு இன்று கூட்டணி இல்லை என்றவுடன் ஆவேசமாகவும் அவதூறாகவும் பேசுவது சரியா? என்று அரசியல் விமர்சர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
இந்த தேர்தல் முடிவல்ல, ஆரம்பம் -விஜய பிரபாகரன் #News18TamilNadu | #TNAssemblyElection2021 | #TNPollsonNews18 https://t.co/31mFbgpxeD pic.twitter.com/des5t5HuXn
— News18 Tamil Nadu (@News18TamilNadu) March 9, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments