கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை பின்னடைவு, ஆனால்.. விஜய பிரபாகரன் பேட்டி!
- IndiaGlitz, [Tuesday,August 22 2023]
கேப்டன் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது மகன் விஜய பிரபாகரன் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது தந்தையின் உடல்நிலை சற்று பின்னடைவாக தான் இருக்கிறது என்றும் ஆனால் அதே நேரத்தில் அவர் விரைவில் குணமடைவார் என்று நாங்கள் நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
சினிமா, அரசியல் என இரண்டு துறைகளிலும் தனது முத்திரை பதித்தவர் விஜயகாந்த். விஜயகாந்தின் தேமுதிக கட்சி நன்றாக வளர்ச்சி அடைந்து கொண்டிருந்த நேரத்தில் தான் திடீரென அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அது அவரது கட்சிக்கு பெரும் பின்னடைவாக இருந்தது.
இந்த நிலையில் கேப்டன் விஜயகாந்த் தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது மகன் விஜய பிரபாகரன், கேப்டன் உடல் நலம் சற்று பின்னடைவாக தான் இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் அவர் விரைவில் குணமடைந்து 100 வயது வரை வாழ்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்று தெரிவித்தார்.
அவர் மீண்டும் பழையபடி பேசுவதற்கும் நடப்பதற்கும் முயற்சிகள் எடுத்து வருகிறோம் என்றும் அவர் தற்போது நன்றாக இருக்கிறார் என்றும் தெரிவித்தார். கேப்டனின் உடல்நிலையில் பின்னடைவு என விஜய பிரபாகரன் கூறியது அவரது ரசிகர்களுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.