'பிச்சை எடு' என்று கூறிய நெட்டிசனுக்கு நாகரீகமாக பதிலடி கொடுத்த 'கேப்டன்' மகன்!

  • IndiaGlitz, [Monday,May 31 2021]

’பிச்சையெடுத்து பிழைக்கலாமே’ என்று கூறிய நெட்டிசனுக்கு கேப்டன் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் நாகரீகமாக பதிலடி கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்தின் தேமுதிக கட்சி 60 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பதும் டெபாசிட் கூட பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜயபிரபாகரன் சமீபத்தில் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்த ஒரு பதிவுக்கு நெட்டிசன் ஒருவர் ’ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்கவில்லை எதற்கு இந்த தேவையில்லாத சீன், போய் பிச்சையெடுத்து பிழைக்கலாமே’ என்று பதிவு செய்திருந்தார். இந்த பதிவுக்கு பதிலடி கொடுத்த விஜய் பிரபாகரன் ’உங்களது மேலான கருத்துக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’முடியாதது எதுவும் இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அதையே நான் பின்பற்றுகிறேன். அதுமட்டுமல்ல பிச்சை எடுத்து இருந்தால் நாங்கள் வேற லெவலில் அரசியலில் இருந்து இருப்போம்’ என்றும் கூறியுள்ளார். நெட்டிசனின் சர்ச்சைக்குரிய கேள்விக்கு நாகரீகமாக பதில் கூறிய விஜய் பிரபாகரனுக்கு அவரது கட்சி தொண்டர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

More News

விஷ்ணு விஷாலின் சகோதரியா இவர்? லைக்ஸ்கள் குவியும் புகைப்படம்!

தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால் என்பதும் 'வெண்ணிலா கபடி குழு' என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் 'குள்ளநரி கூட்டம்

எனது மகனை அறிமுகம் செய்கிறேன்: நடிகை வரலட்சுமியின் வீடியோ வைரல்!

விக்னேஷ் சிவன் இயக்கிய 'போடா போடி' என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் விஜய்யின் 'சர்க்கார்' தனுஷின் 'மாரி 2' விஷாலின் ண்டக்கோழி 2' உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை வரலட்சுமி

ஊரடங்கு நேரத்தில் ஷகிலாவின் தாராள மனம்: பொதுமக்கள் பாராட்டு

ஷகீலா என்றாலே 90களின் கிளாமர் நடிகை என்ற இமேஜ் 'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் மாறி, தற்போது அவரை அனைவரும் ஷகிலா அம்மா என்று அழைத்து வரும் அளவுக்கு அந்த நிகழ்ச்சி

#GoBackStalin டூ #WeStandWithStalin ஹேஸ்டேக்...! டுவிட்டரில் ட்ரெண்டாகும் முதல்வர்...! எப்படி..?

இன்று முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் கொங்கு மாவட்டங்களான திருப்பூர், ஈரோடு  மற்றும் கோவை உள்ளிட்ட இடங்களில் கொரோனா களப்பணிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

வைரமுத்து-வின் "நாட்படு தேறல்" 7-ம் பாடல்...! நெஞ்சை உருக்கும் காதல் வரிகள்...!

வைரமுத்து-வின் "நாட்படு  தேறல்" 7-ம் பாடல்...! நெஞ்சை உருக்கும் காதல் வரிகள்...!