சிறகடிக்க ஆசை: முத்து-மீனாவை வெளியேற்ற திட்டம்.. விஜயா சதியை முறியடிப்பாரா அண்ணாமலை?

  • IndiaGlitz, [Friday,December 22 2023]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ என்ற சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் குறைந்த நாட்களிலேயே இந்த சீரியல் மக்கள் மனதை கவர்ந்து விட்டது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இன்றைய எபிசோடில் முத்து மற்றும் மீனா ஆகிய இருவரையும் வீட்டை விட்டு வெளியேற்ற விஜயா திட்டமிடுகிறார். ஸ்ருதியின் அம்மா நகை கொண்டு வந்த போது தன்னுடைய அப்பாவை பற்றி இழிவாக பேசியதாக விஜயா உடன் சண்டைக்கு சென்ற மீனா, அதன் பிறகு தாலி உள்பட அனைத்து நகைகளையும் கழட்டி கொடுத்து விட்டார்.

இந்த நிலையில் முத்து மற்றும் மீனா இருக்கும் வரை இந்த வீட்டில் நிம்மதி இருக்காது என்றும், அதனால் அவர்கள் இருவரையும் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் தனது தோழி பார்வதி இடம் விஜயா கூறுகிறார். அதேபோல் அவர் மீனாவை அதிகமாக வேலை வாங்கி வறுத்து எடுக்கும் நிலையில் முத்து, மீனாவுக்கு ஆதரவாக பேசுகிறார்.

இந்த நிலையில் அண்ணாமலையுடன் நைசாக பேசும், விஜயா முத்து, மீனா வீட்டில் இருந்தால் எல்லோருக்கும் நிம்மதி இருக்காது, எங்க அப்பா எனக்கு கொடுத்த வீட்டில் எனக்கு ஒரு ரூம் கூட இல்லையா? அதனால் முத்து, மீனாவை தனிக்குடித்தனம் வைத்து விடுவோம் என்று கூறுகிறார். அதற்கு அண்ணாமலை ’உன்னுடைய முடிவை நீ சொல்லிவிட்டாய், என்னுடைய முடிவை நான் சொல்கிறேன்’ என்பதோடு இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.

கதையை செல்லும் விதத்தை பார்க்கும் போது முத்து, மீனாவை விஜயா சதி செய்து வெளியேற்றி விடுவார் என்றே தெரிகிறது. ஆனால் பார்வையாளர்கள் இருவரும் வெளியேறினால் தான் அவர்கள் நிம்மதியாக வாழ்வார்கள் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.