சென்னை மருத்துவமனை இயக்குனரே கொரோனாவுக்கு பலியான சோகம்: அதிர்ச்சித் தகவல் 

சென்னையில் மிகச்சிறந்த மருத்துவமனைகளில் ஒன்று விஜயா மருத்துவமனை. இந்த மருத்துவமனையின் இயக்குனரே கொரோனாவுக்கு பலியாகி இருப்பதாக வெளிவந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையின் இயக்குனர் சரத் ரெட்டி அவர்கள் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவருடைய மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துவிட்டதாக வெளி வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளரும் வாகினி ஸ்டூடியோ நிறுவனருமான நாகிரெட்டியின் மகன் விசுவநாத ரெட்டியின் இரண்டாவது மகன் தான் மரணமடைந்த சரத் ரெட்டி என்பது குறிப்பிடத்தக்கது. 52 வயதான இவர் விஜயா மருத்துவமனையின் இயக்குனர் பொறுப்பை கவனித்து வந்த நிலையில் திடீரென கொரோனாவால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் மருத்துவர்கள் எவ்வளவோ போராடியும் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோர்களுக்கு சிகிச்சை அளித்துவரும் விஜயா மருத்துவமனையின் மருத்துவர்கள் அந்த மருத்துவமனையின் இயக்குநரையே காப்பாற்ற முடியாமல் போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.