'விஜய் 60' திருநெல்வேலி பின்னணியை கொண்ட படமா? புதிய தகவல்
Sunday, May 8, 2016 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படத்தின் வசூல் தெறிக்க வைத்தது என்பது உலகமே அறிந்ததுதான். இந்நிலையில் விஜய்யின் அடுத்த படமான 'விஜய் 60' படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகேயுள்ள பின்னி மில்லில் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக விஜய்யின் அறிமுக பாடலின் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் தற்போது இந்த பாடலின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
தினேஷ் மாஸ்டர் நடனப்பயிற்சி அமைத்த இந்த பாடலில் விஜய்யுடன் சதீஷ் உள்பட பலர் நடனம் ஆடியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அறிமுகப்பாடலின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து ஒருசில வசனக்காட்சிகளின் படப்பிடிப்புகளும் நடைபெற்றதாகவும், இந்த காட்சிகள் திருநெல்வேலியில் நடப்பது போன்று செட் போட்டு நடைபெற்றதாகவும், இதனால் இந்த படத்தின் கதை திருநெல்வேலியை பின்னணியை கொண்டதாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை 'அழகிய தமிழ்மகன்' இயக்குனர் பரதன் இயக்கி வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இந்த படத்தை விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் விரைவில் வெளிவரும் என்றும் இந்த படம் வரும் 2017ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments