காமெடி நடிப்பில் விஜய்யை அசத்திய மொட்டை ராஜேந்திரன்

  • IndiaGlitz, [Tuesday,October 13 2015]

ஆரம்ப காலகட்டத்தில் வில்லனுக்கு அடியாளாக, பின்னர் மெயின் வில்லன் மற்றும் காமெடி வேடங்களில் நடித்து வரும் மொட்டை ராஜேந்திரனுக்கு 'விஜய் 59' திரைப்படம் ஒரு மறக்க முடியாத படமாக அமையும் என கூறப்படுகிறது.

இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் விஜய்க்கு, டிரைவராக நடித்து வரும் மொட்டை ராஜேந்திரன் விஜய்யுடன் இணைந்து காமெடி நடிப்பில் அசத்தியுள்ளதாகவும், விஜய்யே அவரது நடிப்பை பாராட்டியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் எந்த அளவுக்கு ஆக்சன் காட்சிகள் இருக்கின்றதோ அதே அளவுக்கு காமெடி காட்சிகளும் நிறைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் 'விஜய் 59' படத்தை அடுத்து உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்திலும் அவருடன் இணைந்து காமெடியில் கலக்கி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த இரண்டு படங்களும் மொட்டை ராஜேந்திரனுக்கு நல்ல பெயர் வாங்கி கொடுப்பதோடு அவருக்கு திருப்புமுனை படங்களாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'தெறிக்க விடலாமா' டீசரை அடுத்து 'தரலோக்கல்' டீசர்

தல அஜீத் நடித்த 'வேதாளம்' படத்தின் டீசர் மற்றும் போஸ்டர்கள் கடந்த வாரம் வெளியாகி சமூக இணையதளங்களில் பெரும் சுனாமியை ஏற்படுத்திய பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் இன்று இரவு ஏழு மணிக்கு இந்த படத்தின் ஆடியோ டீசர் வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.....

'கான்' பட வதந்திக்கு செல்வராகவன் முற்றுப்புள்ளி

சிம்பு, கேதரீன் தெரசா நடித்து வரும் 'கான்' திரைப்படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்கி வந்த நிலையில் இன்று காலை முதல் இந்த படம் டிராப் ஆகிவிட்டதாக இணையதளங்களிலும்...

பிரித்விராஜ் நடிக்கும் மலையாள படத்தில் 'துப்பாக்கி' விஜய்?

மணிரத்னம் இயக்கிய 'ராவணன்', வசந்தபாலன் இயக்கிய 'காவியத்தலைவன்' உள்பட பல தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ள நடிகர் பிரித்விராஜ்...

உதயநிதியின் 'கெத்து' படம் குறித்த புதிய தகவல்கள்

ஒருகல் ஒருகண்ணாடி', இது கதிர்வேலன் காதலன்' மற்றும் 'நண்பேண்டா' படங்களில் நடித்த உதயநிதி ஸ்டாலின் தற்போது நடித்து வரும் படம் 'கெத்து'...

நானும் ரெளடிதான்' சென்சார் தகவல்கள்

விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் தனுஷ் தயாரித்துள்ள 'நானும் ரெளடிதான்' திரைப்படம் வரும் அக்டோபர் 21ஆம் தேதி ரிலீஸ் ஆகும்...