இளையதளபதியுடன் இறுதிநாள். சமந்தா நெகிழ்ச்சி

  • IndiaGlitz, [Wednesday,October 21 2015]

சீயான் விக்ரமுடன் முதல்முறையாக இணைந்து நடிகை சமந்தா நடித்துள்ள '10 எண்றதுக்குள்ள' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் சமந்தா தற்போது விஜய்யின் அடுத்த படமான 'விஜய் 59' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

ஏற்கனவே கத்தி' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த சமந்தா, கடந்த சில நாட்களாக விஜய்யுடன் படப்பிடிப்பில் இருந்த நிலையில், இன்றுடன் சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இன்றைய இறுதி நாள் படப்பிடிப்பு முடிந்தவுடன் விஜய் உள்பட அனைவரிடமும் நெகிழ்ச்சியுடன் விடைபெற்றதாக சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

அட்லியில் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு 70% முடிந்துவிட்டதாகவும், விரைவில் 'விஜய் 59' படக்குழுவினர்களுடன் எமி ஜாக்சன் இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷுக்கு இது 50வது இடம் என்பதும் குறிப்பிடத்தக்கது. கலைப்புலி எஸ்.தாணு பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.