7 மொழிகளில் உருவாகும் 3D படத்தில் ஹீரோவாக நடிக்கும் தனுஷ் பட வில்லன்

  • IndiaGlitz, [Thursday,June 18 2020]

தமிழ் உள்பட 7 மொழிகளில் உருவாகும் 3D த்ரில் படத்தில் தனுஷ் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாக வெளிவந்துள்ள செய்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது

தனுஷ் நடித்த ’மாரி’ படத்தில் வில்லனாக நடித்தவர் பாடகர் விஜய் யேசுதாஸ். அதன் பின்னர் ’படை வீரன்’ என்ற படத்தில் நாயகனாகவும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இவர் ’சல்மான்’ என்ற 3D தமிழ் திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் ஷாலில் கலூர் என்பவர் இயக்கும் இந்தப் படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, பெங்காலி மற்றும் பஞ்சாபி ஆகிய ஆறு மொழிகளில் டப் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படம் குறித்த கதையை கடந்த நவம்பர் மாதம் தான் கேட்டதாகவும் இந்த கதை மிகவும் எளிமையாகவும் அதே நேரத்தில் த்ரில்லிங் கதையம்சம் கொண்டதாக இருந்ததாகவும் அதனால் தான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் விஜய் ஜேசுதாஸ் கூறியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே துபாய், மலேசியா உள்பட பல பகுதிகளில் படமாக்கப்பட்டு இருப்பதாகவும் மீதி உள்ள காட்சிகள் லாக்டவுன் முடிந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறியுள்ளார்

இந்த படத்தில்தான் ஒரு தொழிலதிபராக நடித்துள்ளதாகவும் உலகம் முழுவதும் சுற்றிவிட்டு இந்தியா திரும்பும் போது தனது கேரக்டருக்கு நடக்கும் போது திடுக்கிடும் திருப்பம் தான் இந்த படத்தின் கதை என்றும் விஜய் யேசுதாஸ் கூறியுள்ளார். இந்த படம் ஒரு திரிலிங் படம் என்பதால் ஆரம்பத்திலேயே இந்த படத்தை 3Dயில் எடுக்க முடிவு செய்ததாகவும் இந்த படத்தின் 3D காட்சிகள் நிச்சயம் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்
 

More News

ஆபாச கமெண்ட் பதிவு செய்த ரசிகரை நேரில் சந்தித்து தமிழ் நடிகை கேட்ட அதிரடி கேள்வி!

சமூக வலைத்தளத்தில் ஆபாசமாக கமெண்ட் செய்த நெட்டிசன் ஒருவரை 'உங்களுக்கு 30 நிமிட சந்தோசத்தை கொடுக்கும் ஆள் நான் இல்லை' என்று சாட்டையடி பதில் கொடுத்த நடிகை அபர்ணா நாயர்

சுஷாந்த் உள்பட 3 பிரபலங்கள் மறைவு குறித்து சிம்பு அறிக்கை!

சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங், சிம்புவின் நண்பர் என்பது பலர் அறிந்ததே. அதேபோல் சிம்புவுக்கு நெருக்கமான நண்பர்களான

சீன எல்லையில் மோதல் ஏற்படக் காரணம் என்ன??? இருதரப்புகள் கூறும் விளக்கம்!!!

கடந்த மே மாதம் 5, 6 தேதிகளில் இருந்து இந்திய எல்லைப் பகுதியான லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்து மீறுகிறது.

இவருடைய பந்தை எதிர்க்கொள்ள நான் ரொம்பவே சிரமப்பட்டேன் – ஸ்டீவ் ஸ்மித் கருத்து!!!

ஆஸ்திரேலிய அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேன் ஆக விளங்கும் ஸ்டீவ் ஸ்மித் தற்போது ஒரு சுவாரசியமான கருத்தை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்

என்னை தமிழக முதல்வர் ஆக்குங்கள்: ஒரே வாரத்தில் நிலைமையை சரிசெய்கிறேன்: மீராமிதுன் சவால்

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.