The Greatest Of All Time: போட்டோ தானே பார்த்து இருப்பீங்க.. இதோ வீடியோவே வந்துருச்சு..!

  • IndiaGlitz, [Saturday,January 13 2024]

தளபதி விஜய் நடித்து வரும் ’G.O.A.T.’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் தனியார் ஸ்டுடியோ ஒன்றில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நிலையில் வெளியே விஜய்யை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்திருந்தனர்

இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் முன் தோன்றி கையசைத்தார் என்பதும் இது குறித்த புகைப்படம் மிகப் பெரிய அளவில் இணையதளங்களில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த சம்பவத்தின் வீடியோவை சற்று முன் ஏஜிஎஸ் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.

இதுவரை ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்த புகைப்படத்தின் இன்னொரு பகுதியாக வீடியோ வெளி வந்துள்ளதை அடுத்து ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர். இந்த வீடியோ ரசிகர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய பொங்கல் பரிசாக கருதப்படுகிறது. 41 நொடிகள் மட்டுமே உள்ள இந்த வீடியோவில் விஜய் ரசிகர்களை நோக்கி கையசைக்கும்போது மாலைகளும் பூக்களும் அவர் மீது வந்து விழும் காட்சி மாஸ் ஆகவுள்ளது.

விஜய், பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வருகின்றனர். வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

மீண்டும் தள்ளிப்போகிறதா 'தங்கலான்' ரிலீஸ்.. புதிய தேதி என்ன?

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த 'தங்கலான்' திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளியாகும் என முதலில் கூறப்பட்டது. ஆனால் அதன் பின்னர் இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாததால் ஜனவரி 26 ஆம் தேதி

கண்ணீருடன் விடை பெற்ற போட்டியாளர்கள்.. பூர்ணிமாவை கட்டியணைத்த விஷ்ணு.. நெகிழ்ச்சி காட்சிகள்..!

பிக் பாஸ் சீசன் 7 நாளையுடன் முடிவடைய இருக்கும் நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் ஆன போட்டியாளர்கள் ஒவ்வொருவராக சிறப்பு விருந்தினராக வீட்டிற்கு வந்தார்கள் என்பதை பார்த்தோம்.

பிக்பாஸ் வீட்டில் அருண்ராஜா காமராஜ்.. மாயாவின் குரூப்பிஸத்தை மறைமுகமாக குத்தி காட்டினாரா?

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நாளையுடன் முடிவடைய இருக்கும் நிலையில் நேற்று சிறப்பு விருந்தினராக இயக்குனர் அருண்ராஜா காமராஜ் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றார். தன்னுடைய இயக்கத்தில்

எங்களை விட மாயா தான் முக்கியமா? பிக்பாஸ் போட்டியாளரை கழுவி ஊற்றும் குடும்ப உறுப்பினர்..!

 பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் ஒருவரை அவருடைய குடும்ப உறுப்பினரே, 'எங்களை விட  மாயா தான் முக்கியமா என ஆதங்கத்தோடு பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'அயலான்' 'கேப்டன் மில்லரை விட பல மடங்கு வசூல் செய்த 2 படங்கள்.. பொங்கல் வின்னர் யார்?

பொங்கல் விருந்தாக 'அயலான்' 'கேப்டன் மில்லர்' 'மிஷின் சாப்டர் ஒன்' மற்றும் 'மெர்ரி கிறிஸ்துமஸ்' ஆகிய நான்கு தமிழ் நடிகர்களின் படங்களும், மகேஷ் பாபு நடித்த 'குண்டூர் காரம்' மற்றும்  தேஜா நடித்த