விஜய் காங்கிரஸ் கட்சியில் சேருவாரா? கே.எஸ்.அழகிரி பதில்!

  • IndiaGlitz, [Friday,February 21 2020]

சமீபத்தில் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தபோது அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இது மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என குரல் கொடுத்தனர். குறிப்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் இது குறித்து ஒரு நீண்ட அறிக்கை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே தளபதி விஜய் பாஜகவுக்கு எதிரான கருத்தைக் கூறி வருவதால் அவர் காங்கிரஸ் கட்சியில் சேர வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை கேஎஸ் அழகிரி அவர்கள் சந்தித்தபோது ’காங்கிரஸ் கட்சியில் இணைய விஜய்க்கு அழைப்பு விடுக்கப்படுமா? என்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அவர் இதுகுறித்து கூறியபோது, ‘விஜய் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் மனதார ஏற்றுக் கொள்வோம் என்றும் ஆனால் அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அவர் வரவேண்டும் என்று நாங்கள் அழைக்கவில்லை 'என்றும் தெரிவித்தார்.

ஏற்கனவே திமுகவும் விஜய்யை தங்கள் கட்சியில் இழுக்க முயற்சி செய்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியும் விஜய்க்கு அழைப்பு விடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இன்னும் ஒரு ஆண்டு இருக்கும் நிலையில் விஜய் ஏதாவது ஒரு அரசியல் கட்சிகள் சேர்வாரா? அல்லது தனி கட்சி தொடங்குவாரா? அல்லது அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.