இவர் தான் விஜய்யின் மச்சினிச்சியா? வைரல் புகைப்படம்!
- IndiaGlitz, [Thursday,July 07 2022]
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் கடந்த 1999ஆம் ஆண்டு லண்டனைச் சேர்ந்த சங்கீதா சொர்ணலிங்கம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஜேசன் விஜய் மற்றும் திவ்யா சாஷா ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் விஜய்யின் மனைவி சங்கீதா இலங்கையைச் சேர்ந்தவர் என்றாலும் அவருடைய தந்தை சொர்ணலிங்கம் பல ஆண்டுகளுக்கு முன்பே லண்டனில் செட்டில் ஆகி விட்டதால் தற்போது அவர் தனது குடும்பத்துடன் லண்டனில் தான் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜய்யின் படப்பிடிப்பை சங்கீதா பார்க்க வந்தபோது அவருடன் அவருடைய தங்கையும் வந்ததாக தெரிகிறது. இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் திடீரென வைரலாகி வருகிறது.
விஜய்யின் மனைவி சங்கீதாவின் தங்கை தற்போது லண்டனில் தனது தந்தையின் தொழிலை கவனித்து வருவதாகவும் அவரும் லண்டனில் செட்டில் ஆகி விட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் விஜய்யின் மச்சினிச்சி பெயர் உள்பட வேறு எந்த விபரங்களும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.