கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய விஜய் மனைவி

  • IndiaGlitz, [Wednesday,August 08 2018]

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவை அடுத்து அவரது உடலுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா உள்பட பல திரையுலக பிரமுகர்கள் நேரில் இன்று காலை முதல் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தளபதி விஜய் தற்போது அமெரிக்காவில் 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால் அவரால் கருணாநிதிக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை. இருப்பினும் படப்பிடிப்பு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சற்றுமுன் விஜய்யின் மனைவி சங்கீதா சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். நடிகர் விஜய், அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பியதும் கருணாநிதியின் சமாதியில் அஞ்சலி செலுத்துவார் என்று கூறப்படுகிறது.