வாக்களிக்க வந்த இடத்தில் மன்னிப்பு கேட்ட விஜய்: வைரல் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வந்த போது வரிசையில் நின்ற வாக்காளர்களிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகம் முழுவதும் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை அடுத்து காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்ய காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தளபதி விஜய் தனது வாக்கை பதிவு செய்ய வந்தார். சிகப்பு நிற காரில் வந்த அவரை பார்த்தவுடன் பத்திரிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் முண்டி யத்ததால் பரபரப்பு ஏற்பட்டது
மேலும் அவரை படம்பிடிக்க போட்டோகிராபர்கள் முண்டி அடித்ததால் அங்கு வாக்களிக்க வரிசையில் நின்ற பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்பட்டது. இதனை அடுத்து தன்னால் ஏற்பட்ட இடைஞ்சலுக்கு வரிசையில் நின்ற பொதுமக்களிடம் விஜய் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டார். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
தாம் வாக்களிக்க வந்த போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு மக்களுக்கு ஏற்பட்ட இடையூறுக்காக மன்னிப்பு கோரிய நடிகர் @actorvijay pic.twitter.com/AFVJ3kOaLb
— Mathiyazhagan Arumugam (@Mathireporter) February 19, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com