நெல்லை, தூத்துக்குடி மக்களை சந்திக்கிறார் விஜய்.. வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு நிவாரணம்..!

  • IndiaGlitz, [Saturday,December 30 2023]

சமீபத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ததால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்பதும் இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது நெல்லை உட்பட நான்கு மாவட்டங்களிலும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது என்பதும் தமிழக அரசு உரிய மீட்பு பணி நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை உட்பட நான்கு மாவட்ட மக்களுக்கு பலர் நிவாரண உதவி செய்து வரும் நிலையில் தளபதி விஜய் இன்று நிவாரண உதவி செய்வதற்காக நெல்லை செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தூத்துக்குடி நெல்லை மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அவர் நேரில் சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்க இருப்பதாக விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

நெல்லையில் உள்ள கேடிசி நகரில் உள்ள மாதா மஹாலில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு 400க்கும் மேற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு நிவாரண உதவியை விஜய் நேரில் வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

More News

தனுஷின் 'கேப்டன் மில்லர்' சென்சார் தகவல்.. அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியும் அறிவிப்பு..!

தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்ட நிலையில் இந்த படம் பொங்கல் திருநாளில் வெளியாகும்

எலிமினேஷனில் புது ட்விஸ்ட்.. தப்பித்தார் மாயா.. அப்படியென்றால் எவிக்ட் செய்யப்பட்டது யார்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் குறைந்த வாக்குகள் பெற்றிருந்த மாயா தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது எலிமினேஷனில் புது ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது

சில மூஞ்சிகளை எல்லாம் பார்த்தா வெறுப்பா இருக்குது: விசித்ரா சொல்வது யாரை? தினேஷை அல்ல..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விசித்ரா மற்றும் தினேஷ் ஆகிய இருவரும் எலியும் பூனையும் போல ஆரம்பம் முதலே சண்டை போட்டு வருகின்றனர். தினேஷ் குறித்து விசித்ராவும் விசித்ரா குறித்து

என் முதல் படத்துல இருந்த 2 பேரும் இப்ப உயிரோட இல்லை.. விஜயகாந்த் குறித்து நமீதா..!

நடிகை நமீதா தமிழில் விஜயகாந்த் நடித்த 'எங்கள் அண்ணா' என்ற திரைப்படத்தில் அறிமுகமான நிலையில் அந்த படத்தில் தன்னுடன் பணிபுரிந்த இரண்டு பேருமே

சாலிகிராமம் பிரதான சாலைக்கு 'கேப்டன்' விஜயகாந்த் சாலை பெயர்.. வேண்டுகோள் விடுத்தது யார் தெரியுமா?

சாலிகிராமம் பிரதான சாலைக்கு 'கேப்டன்' விஜயகாந்த் சாலை பெயர் என பெயர் வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுக்கு, தமிழ்  திரைப்பட பத்திரிகையாளர்கள்